ஓபிசிக்கு 27 % இடஒதுக்கீடு சூப்பர்… ஆனா நமக்கான இலக்கு இன்னும் இருக்கு : நம்மவரின் தொலைநோக்கு பார்வை..!!!

Author: Babu Lakshmanan
31 July 2021, 12:20 pm
Quick Share

மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்கியதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதமும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டது. மேலும், இந்த இடஒதுக்கீடு நடப்பு கல்வி ஆண்டு முதலே அமல்படுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பிற்கு சமூக நீதி நிலைநாட்டப்பட்டதாக திமுக, அதிமுக மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகிள் வரவேற்பு தெரிவித்து வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் வரவேற்பு தெரிவித்து டுவிட் போட்டுள்ளார்.

அதில், “மருத்துவப் படிப்பிற்கான மத்திய தொகுப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு சாத்தியமாகி இருப்பது சமூகநீதிப் பயணத்தில் குறிப்பிடத்தக்க வெற்றி. நீட் தேர்வு ரத்து, மத்திய தொகுப்புமுறையை கைவிடுதல் என நாம் எட்ட வேண்டிய இலக்குகள் இன்னும் இருக்கின்றன,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 171

0

0