சமையல் சிலிண்டர் விலை உயர்வுக்கு கண்டனம்.. எப்போது விடிவு வரப்போகிறது? : கமல்ஹாசன்

2 July 2021, 8:11 pm
MNM Kamal - Updatenews360
Quick Share

சென்னை : சமையல் சிலிண்டர் விலை உயர்வுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சமையல் சிலிண்டரின் விலை ரூ.25 அதிகரித்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன. இது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், இந்த விலை உயர்வுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் விடுத்துள்ள பதிவில், “சமையல் எரிவாயு விலையுயர்வு எல்லையைத் தாண்டுகிறது. தனது சாதனையைத் தானே முறியடிக்கிறது. நேரடியாக மக்கள் வயிற்றில் அடிக்கிறோம் எனும் ஓர்மை மத்திய அரசுக்குத் துளியும் இல்லை. எப்போது இதற்கெல்லாம் விடிவு வரப்போகிறது?,” என்று பதிவிட்டுள்ளார்.

Views: - 187

0

0