சிகிச்சை ஓவர்… டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார் கமல் : மீண்டும் கட்சிப் பணிகள் எப்போது..?

22 January 2021, 2:17 pm
Quick Share

சென்னை : காலில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட கமல்ஹாசன், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

பிக் பாஸ் மற்றும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், காலில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும், இதனால் சிறிது காலம் ஓய்வு தேவைப்படுவதாகவும் கூறியிருந்தார். எனவே, சிகிச்சைக்குப் பின்னான ஓய்வுக்கு பிறகு, மீண்டும் மக்களை சந்திக்க இருப்பதாகவும் அறிவித்தார்.

இதையடுத்து, சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் எலும்பியல் அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட கமல்ஹாசன் தற்போது நலமுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசனை மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும், மருத்துவமனை நிர்வாகமும் நல்லமுறையில் பார்த்துக் கொள்வதாகவும், 4,5 நாட்களுக்கு பிறகு அவர் வீடு திரும்பி விடுவார் என அவரது மகள்களான ஸ்ருதி மற்றும் அக்ஷரா ஹாசன் ஆகியோர் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், உடல்நலம் பெற்ற கமல்ஹாசன் சிகிச்சைக்கு பிறகு இன்று வீடு திரும்பினார்.

இதனிடையே, இன்னும் ஒரு சில வார ஓய்வுக்கு பிறகு கமல்ஹாசன் 2வது கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

Views: - 0

0

0