வெற்றிகரமாக அறுவை சிகிச்சை… அப்பா நலமுடன் இருக்கிறார் : கமல் உடல்நிலை குறித்து மகள்கள் அறிக்கை..!!

19 January 2021, 12:38 pm
shruti-akshara-kamal - updatenews360
Quick Share

சென்னை : கமல்ஹாசனின் காலில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக அவரது மகள்கள் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

பிக் பாஸ் மற்றும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், காலில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும், இதனால் சிறிது காலம் ஓய்வு தேவைப்படுவதாகவும் கூறியிருந்தார். எனவே, சிகிச்சைக்குப் பின்னான ஓய்வுக்கு பிறகு, மீண்டும் மக்களை சந்திக்க இருப்பதாகவும் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் எலும்பியல் அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட கமல்ஹாசன் தற்போது நலமுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கமல்ஹாசனின் மகள்களான ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஹாசன் ஆகியோர் கூட்டாக அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில், கூறியிருப்பதாவது :- இன்று காலை ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் எங்கள் அப்பாவுக்கு காலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அப்பா நலமுடன் உற்சாகமாக இருக்கிறார். அப்பாவை மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும், மருத்துவமனை நிர்வாகமும் நல்லமுறையில் பார்த்துக் கொள்கிறார்கள். 4,5 நாட்களுக்கு பிறகு அப்பா வீடு திரும்புவார். சில நாட்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் மக்களை சந்திப்பார். மகிழ்விப்பார். அனைவரது அன்புக்கும், பிரார்த்தனைகளுக்கும் எங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம், என தெரிவித்துள்ளார்.

Views: - 0

0

0