அமித்ஷா சொல்வது முற்றிலும் பொய்: கேரள முதல்வரைத் தொடர்ந்து குற்றம் சுமத்திய கனிமொழி…

Author: Sudha
3 August 2024, 3:27 pm
Quick Share

கேரளா வயநாடு பகுதியில் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 350 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.காணாமல் போன 250 க்கும் மேற்பட்டோரை தேடும் பணி நடைபெற்று வருகிறது

இந்நிலையில் ராஜ்யசபாவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வயநாட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். நிலச்சரிவு குறித்து முன்கூட்டியே கேரளாவுக்கு எச்சரிக்கை விடுத்தோம்.நிலச்சரிவு ஏற்படும், மக்கள் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும் தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த ஒன்பது குழுக்களை ஜூலை 23 ஆம் தேதியே கேரளாவிற்கு அனுப்பி வைத்ததாகவும், அதன்பிறகும் கேரள அரசு விழித்துக் கொள்ளவில்லை என்றும் விமர்சித்தார்.

இந்நிலையில், அமித் ஷாவின் குற்றச்சாட்டு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்,இந்திய வானிலை ஆய்வு மையம் வயநாடு மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை மட்டுமே விடுத்ததாகக் கூறினார். வயநாட்டில் 500 மில்லி மீட்டருக்கு மேல் மழை பெய்துள்ளதாகவும், இது வானிலை ஆய்வு மையம் கணித்ததை விட மிக அதிகம் என்றும் கூறினார். செவ்வாய்க்கிழமை அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்ட பின்னரே வயநாடு மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகக் கூறிய பினராயி விஜயன், குற்றம் சாட்டுவதற்கான சரியான நேரம் இதுவல்ல என்றும் தெரிவித்தார்.

இன்று தூத்துக்குடியில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி எம் பி தமிழ்நாட்டில் வெள்ளம் வந்த போது 7 நாட்களுக்கு முன்பே தெரிவித்தோம் என்று சொன்னார்கள் ஆனால் அது உண்மை இல்லை என்று முதல்வர் மு க ஸ்டாலின் தெளிவு படுத்தினார்.இன்று கேரளாவிலும் 7 நாட்களுக்கு முன்பே தகவல் தெரிவித்ததாக கூறினார்கள் இது உண்மைக்குப் புறம்பாக உள்ளது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெளிவுபடுத்தியுள்ளார் என பேசினார்.

மேலும் மத்திய அரசு எந்தப் பாதிப்பையும் தேசிய பேரிடராக அறிவிக்கத் தயாராக இல்லை; அவர்களே தேசிய பேரிடராக தான் இருக்கின்றனர் என்று பேசினார்.

  • Instagram ஓட்டலில் அறை எடுத்து 20 நாட்களாக சிறுமியை சீரழித்த இளைஞர் : இன்ஸ்டாகிராம் நண்பனால் வந்த வினை!!
  • Views: - 216

    0

    0