கன்னியாகுமரி பாஜக பிரமுகர் வீட்டில் மர்மநபர் பெட்ரோல் குண்டு வீச்சு : சிக்கிய ஆதாரம்… வைரலாகும் சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
25 September 2022, 12:42 pm
Kumari Petrol - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : கருமன்கூடல் பகுதியில் பாஜக பிரமுகர் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்ற நிலையில் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி மண்டைக்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடு முழுவதும் கடந்து மூன்று நாட்களுக்கு முன் என்ஐஏ பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் வீடுகள் அலுவலகங்கள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். தமிழகத்தில் 12-இடங்களில் நடைபெற்ற சோதனையில் பலர் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களில் பாஜக ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் வீடுகளில் தொடர் பெட் ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் அரங்கேறியது

இதனையடுத்து முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் கருமன்கூடல் பகுதியில் உள்ள பாஜக பிரமுகரும் தொழிலதிபருமான கல்யாணசுந்தரம் என்பவர் வீட்டில் நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் பெட்ரோல் குண்டுகளை வீசி சென்றுள்ளனர்

ஜன்னலில் விழுந்த பெட்ரோல் குண்டு பெரிய அளவில் தீப்பற்றி எரியாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டு 2-சொகுசு கார்களும் தப்பியது

தகவல் அறிந்து சம்பவ இடத்திள்கு வந்த மண்டைக்காடு போலீசார் தடையங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே அந்த வீட்டில் பாஜக தொண்டர்கள் குவிய தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து பெட்ரோல் குண்டை வீசி செல்லும் பரபரப்பு வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

Views: - 741

0

0