கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள்.. காங்கிரஸ் முன்னிலை… பாஜகவுக்கு பின்னடைவு… அதிருப்தியில் குமாரசாமி..!!

Author: Babu Lakshmanan
13 May 2023, 9:39 am
Bjp Congress - Updatenews360
Quick Share

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்று வருகிறது.

224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகா சட்டப்பேரவைக்கு கடந்த 10ம் தேதி தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவின் போது 73.19 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட்டு வருகிறது.

பெங்களூருவில் உள்ள 28 தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை 6 மையங்களிலும், மற்ற தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை மாநிலத்தில் உள்ள 30 வாக்கு எண்ணும் மையங்களிலும், ஒட்டுமொத்தமாக மாநிலம் முழுவதும் 36 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

ஆரம்பத்தில் காங்கிரஸ், பாஜக மாறிமாறி முன்னிலை பெற்று வந்தாலும், தற்போது, அறுதிப் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை சற்று கடந்து, 118 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. பாஜக 80 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதேவேளையில், மதசார்பற்ற ஜனதா தளம் 25 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

பாஜக முதலமைச்சர் வேட்பாளர் பசவராஜ் பொம்மை, எடியூரப்பாவின் மகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்து வருகின்றனர். அதேவேளையில், பாஜகவில் இருந்து காங்கிரஸ் இணைந்து போட்டியிட்ட ஜெகதீஷ் ஷெட்டர் மற்றும் மஜத தலைவர் குமாரசாமி ஆகியோரி பின்னடைவை சந்தித்துள்ளனர்.

காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், மதியம் 2 மணிக்குள் பெரும்பாலான தொகுதிகளின் முடிவுகள் வெளியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் வெற்றியை கொண்டாட தொடங்கிவிட்டனர்.

Views: - 351

0

0