மதிய சத்துணவு திட்டத்தில் அழுகிய முட்டைகள்… மாணவர்கள் பகீர் : கருணாநிதியின் முதல் தொகுதியில் நடந்த அவலம்..!!

Author: Babu Lakshmanan
24 December 2021, 6:47 pm
karunanidhi - egg - updatenews360
Quick Share

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சட்டப்பேரவைக்கு முதல் முறையாக தேர்வு செய்யப்பட்ட தொகுதியில், சத்துணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முட்டைகள் அழுகிய நிலையில் இருந்ததால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தோகைமலை அருகே நாகனூர் அரசு தொடக்கப்பள்ளியில் மதியம் சாப்பிடுவதற்காக வழங்கப்பட்ட சத்துணவு முட்டையில் முட்டைகள் அழுகி இருந்ததாகவும், முட்டையில் ஒரு வித துர்நாற்றம் வீசியதாகவும் மாணவர்கள் புகார் அளித்தனர்.

அதனடிப்படையில், பள்ளி நிர்வாகம் உடனே பள்ளியின் மேலாண்மைக்குழுவினர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தினை தொடர்பு கொண்ட போது, மூன்று குழுக்கள் இதனை விசாரித்ததாக தெரிய வருகின்றது. தங்களுக்கு வழங்கிய முட்டைகள் இது போல தான் இருந்து வருவதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முட்டை டெண்டரில் ஏதேனும் ஊழல் நடைபெற்றுள்ளதா..? அல்லது வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கொடுக்கப்பட வேண்டிய முட்டைகள் கால தாமதமானதா..? என்று பல்வேறு கோணங்களில் மாவட்ட நிர்வாகம் விசாரணையை துவக்கி வருகின்றது. ஏற்கனவே கடந்த சில வாரங்களாகவே திருப்பூர், கரூர் மாவட்டத்தில் அடிக்கடி முட்டைகளில் குளறுபடி மற்றும் அழுகிப்போன முட்டைகளின் நிகழ்வு தொடர்வதாகவும், இனி இது போல வரும் காலங்களில் நடக்காமல் இருந்தால் வளரும் தலைமுறையான மாணவர்கள் சமுதாயம் நலமாக இருக்கும் என்கின்றனர் சமூக நல ஆர்வலர்கள்.

மேலும், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய தந்தையும், முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி அவர்கள் முதன்முதலில் சட்டசபைக்கு செல்ல காரணமான இந்த குளித்தலை தொகுதிக்கு இந்த சோதனையா..? என்றும், அம்மா உணவகம் போன்று கலைஞர் பெயரில் உணவகம் தொடங்க முயற்சிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அரசு, கருணாநிதியின் முன்னாள் தொகுதியையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்கட்சியினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

குளித்தலை தொகுதி திமுக எம்எல்ஏவான மாணிக்கம் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Views: - 230

0

0