குஷ்புவை தொடர்ந்து பாஜகவில் களம் காணவிருக்கும் கருணாஸ் : தமிழக அரசியலில் ‘விறுவிறு’

Author: Babu
12 October 2020, 7:45 pm
kushbu - karunas - updatenews360
Quick Share

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்து வந்த நடிகை குஷ்பு கடந்த 5 நாட்களுக்கு முன்பு பா.ஜ.க அரசை விமர்சித்திருந்தார். இந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத நிலையில், இன்று டெல்லியில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருடன் பிரபல ஊடகவியலாளர் மதன் ரவிச்சந்திரனும் பாஜகவில் சேர்ந்தார்.

திமுகவில் இருந்து காங்கிரசுக்கு மாறிய குஷ்புவுக்கு அக்கட்சியில் செய்தித் தொடர்பாளர் பதவி கொடுக்கப்பட்டது. தற்போது, பாஜகவிற்கு தாவியுள்ள அவருக்கு என்ன பொறுப்பு வழங்கப்படும் என தமிழக அரசியல் தலைவர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Karunas mla - updatenews360

இந்த நிலையில், குஷ்புவைத் தொடர்ந்து, புலிப்படை கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான நடிகர் கருணாஸ், பாஜகவில் இணை விருப்பம் தெரிவித்துள்ளார். அதாவது, மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்டினால், தனது கட்சியை பாஜகவுடன் இணைத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் சசிகலா தரப்பினருக்கு முதலில் ஆதரவு தெரிவித்து வந்த எம்எல்ஏ கருணாஸ், தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தனது முழு ஆதரவை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 43

0

0