‘திமுக ஆட்சிக்கு வந்து விட்டது’ : தீக்குளித்து உயிரை விட்ட முன்னாள் அரசு ஊழியர்… கரூரில் அதிர்ச்சி சம்பவம்..!!

9 July 2021, 5:11 pm
Quick Share

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் குலதெய்வக் கோவிலில் தொண்டர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் அருகே மண்மங்கலத்தில் உள்ளது காளியம்மன் திருக்கோயில். இந்தக் கோவில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் குலதெய்வம் இந்த கோவில். இன்று காலை கோவிலுக்குள் வந்த நபரொருவர் தனது பையில் வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதைக் கண்ட கோவிலுக்கு வந்த பக்தர்கள் அங்கும் இங்கும் சிதறி ஓடினர். ஆனால், அந்த நபர் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார்.

தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட நபரின் அருகே வாக்குமூலக் கடிதம் ஒன்று கிடந்துள்ளது. அந்த கடிதத்தில் திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்றும், செந்தில் பாலாஜி அமைச்சர் ஆக வேண்டும் என்று இந்தக் கோயிலில் தான் வேண்டிக் கொண்டதாகவும், வேண்டுதல் நிறைவேறியதால் உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவில் வளாகத்திற்குள் தற்கொலை செய்துகொண்ட நபர் லாலாபேட்டை சேர்ந்த உலகநாதன் என்றும், இவர் போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் எனவும் கூறப்படுகிறது. தொடர்ந்து வாங்கல் காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஏற்கனவே பெண் ஒருவர் திமுக வெற்றி பெற்றதற்கு நாக்கை அறுத்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடந்து சில மாதங்களுக்குள் ஒருவர் தீவைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நல்ல அறிவுரை வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் கேட்டுக் கொண்டனர்.

Views: - 246

0

0