முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ரெய்டில் ரூ.26 லட்சம் பறிமுதல் : லஞ்ச ஒழிப்புத்துறை

22 July 2021, 8:01 pm
mr vijayabaskar - raid - - updatenews360
Quick Share

கரூர் : முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் இன்று நடத்தப்பட்ட சோதனையில் சுமார் ரூ.26 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கரின் வீடு உள்பட 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று திடீர் சோதனை நடத்தினர். சென்னையில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. சோதனை நடந்து வருவதால் போலீசாரும் சம்பந்தப்பட்ட இடங்களில் குவிக்கப்பட்டனர்.

அமைச்சராக இருந்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்களுக்கு சொந்தமான 26 இடங்களில் நடந்த சோதனையில் ரூ.25.56 லட்சம் மற்றும் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

Views: - 117

0

0

Leave a Reply