கரூரில் 8வது நாளாக நீடிக்கும் ஐடி ரெய்டு… அமைச்சருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை!!

Author: Babu Lakshmanan
2 June 2023, 11:01 am
Quick Share

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் 8வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

கரூரில் கடந்த 26ஆம் தேதி தொடங்கிய சோதனை 6-வது நாளாக நடைபெற்று வருகிறது. நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் அலுவலகத்தில் தீவிர சாதனையில் ஈடுபட்ட வருமான வரித்துறை அதிகாரிகள், அசோக் குமார் நேரில் ஆஜராக கூறி அவரது வீட்டில் சம்மன் ஒட்டி இருந்தனர். அதற்கு கால அவகாசம் கேட்டு அவர்கள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

காந்திகிராமம் பகுதியில் அமைந்துள்ள பிரேம்குமார் – சோபனா வீட்டில் தொடர்ந்து தீவிர சோதனை நடத்தி வரும் நிலையில், நேற்று முன்தினம் சோபனாவை அழைத்துக் கொண்டு சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் உள்ள அலுவலகம் ஒன்றில் வைத்து சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக துருவி துருவி விசாரணை செய்தனர். இந்த நிலையில் அவரது வீட்டில் நேற்றும் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும், கரூர் வையாபுரி நகர் 4வது கிராஸ் பகுதியில் அமைந்துள்ள ஆடிட்டர் அலுவலகம், சின்ன ஆண்டாகோவில் ஏ.கே.ஜி காலனி பகுதியில் அமைந்துள்ள மளிகை கடை உரிமையாளர் தங்கராஜ் வீடு ஆகிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்புடன் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் 8வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். 23 இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில், இன்று மேலும் பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

Views: - 134

0

0