வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகாரிலும், உரிய வகையில் வரி செலுத்தாக காரணத்தாலும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நண்பர்கள் என 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை கடந்த மாதம் சோதனை நடத்தியது.
கரூரில் மட்டும் சுமார் எட்டு நாட்களுக்கு நடைபெற்ற சோதனையில் பல இடங்களில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீட்டில் நடைபெற்ற சோதனையிலும் கணக்கில் வராத ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
அப்போது கரூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் சோதனை செய்த வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரு சில இடங்களில் சீல் வைத்தனர். இதனையடுத்து அந்த பகுதிகளில் கடந்த வாரம் அதிகாரிகள் மீண்டும் சோதனையில் நடத்தி இருந்தனர்.
இந்த பரபரப்பு முடிவடைவதற்குள் அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்து செந்தில் பாலாஜி மோசடி செய்ததாக கூறி அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.அப்போது அவருக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த பரபரப்புக்கு மத்தியில் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமாருக்கு ஏற்கனவே 3 முறை வருமானவரித்துறையினர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் வருமானவரித்துறை அதிகாரியின் முன்பாக அசோக்குமார் ஆஜராகாமல் கூடுதல் கால அவகாசம் கேட்டிருந்தார்.
இந்த நிலையில், கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மற்றும் அவர் தொடர்புடைய 10 இடங்களில் வருமான வரித்துறையினர் மீண்டும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி இரண்டு நாட்கள் நடைபெற்ற சோதனையின் போது சீல் வைக்கப்பட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். தற்போது மூன்றாவது கட்டமாக கரூரில் வருமான வரி அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் மீண்டும் சோதனையை தொடங்கியுள்ளனர். இதனால், தமிழகத்தில் பரபரப்பு எழுந்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.