நல்ல சாலைகளை பெயர்த்து மீண்டும் புதிய சாலை போடுவதா…? மறுபடியும் சர்ச்சைக்குள்ளான கரூர் மாநகராட்சி…!!

Author: Babu Lakshmanan
23 April 2022, 2:18 pm
Quick Share

போடாத சாலைக்கு பில் போட்டு முறைகேடு செய்த சம்பவத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாத நிலையில், கரூர் மாநகராட்சியில் தற்போது புதிய சாலைகள் போடப்பட்டு வருவது குழப்பத்தையும், மக்களிடையே சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.

10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த திமுக, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற விமர்சனத்தை தற்போது வரை எதிர்கொண்டு வருகிறது. அதேவேளையில், பொங்கல் பரிசு தொகுப்பில் ஊழல், மின்சாரத்துறையில் முறைகேடு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை எதிர்கட்சிகள் முன்வைத்து வருகின்றன.

இப்படியிருக்கையில், அண்மையில் கரூரில் போடாத சாலைக்கு பில் போட்டு முறைகேடு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய, 14 க்கும் மேற்பட்ட நெடுஞ்சாலை துறையினரை சஸ்பெண்ட் செய்துள்ளது.

இந்த நிலையில், கரூர் மாநகராட்சியில் தார் சாலைகள் போட்டது மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

திமுக ஆட்சி அமைந்தவுடன் மற்றும் அதற்கு முன்னர் உள்ள அதிமுக ஆட்சியில் போடப்பட்ட சாலைகள் நன்கு உள்ள நிலையில், அதை, பெயர்த்து மீண்டும் புதிய சாலைகள் போடப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக, கரூர் பண்டரிநாதன் ஆலயத்தின் அருகே உள்ள தெருவில் கரூர் மாநகராட்சி ஆரம்பித்துள்ளது.

கரூர் மாநகராட்சி மேயராக தற்போது பதவி வகிப்பவர் கவிதா என்ற படித்த பட்டதாரி பெண்மணி மட்டுமல்லாமல் ஒரு ஆசிரியரும் ஆவார். மேலும் முறைகேட்டிற்கு துணை போகாதவரும் ஆவார் என்று திமுகவினரிடையே பேசப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் புதிய தார் சாலையில் ஏன் மீண்டும் பறிக்கப்பட்டு அதில் சாலைகள் போடப்படுகின்றது. ஏற்கனவே நகராட்சியில் இருந்து மாநகராட்சி ஆனதால், சொத்து வரி உயர்வு ஒருபுறம் இருக்க, மக்களின் வரிப்பணத்தில் முறைகேடுகள் ஏதும், இந்த சாலைகள் அமைப்பதில் ஏற்படாத வண்ணம், கரூர் மாநகராட்சி மேயர் கவிதா திகழ வேண்டும் என்றும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுமட்டுமல்லாமல், மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் குடிநீர் இல்லாமல், ஒரு சில பகுதிகளுக்கு மட்டும், தெருவிளக்கு மற்றும் கழிவு நீர் போகும் வாய்க்கால்களை அமைக்கும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 625

0

0