58 நாட்கள் கடலில் தத்தளித்த மீனவர்கள்: பத்திரமாக தாயகம் திரும்பினர்..!!

Author: Aarthi
8 October 2020, 3:43 pm
ministre jayakumar fishers - updatenews360
Quick Share

சென்னை: கடந்த ஜுலை மாதம் மீன்பிடிக்கச் சென்று 58 நாட்கள் கடலில் தத்தளித்த காசிமேடு மீனவர்கள் பத்திரமாக சென்னை திரும்பினர்.

கடந்த ஜுலை மாதம் 23ம் தேதி காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் விசைப்டகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். ஆகஸ்ட் 7ம் தேதி கரை திரும்ப திட்டமிட்ட அவர்கள் கரை திரும்பவில்லை.

இதனையடுத்து, மீன்வளத்துறை, இந்திய கடலோர காவல்படை, இந்திய கடற்படை ஆகியவை இணைந்து தேடுதல் வேட்டையை துரிதப்படுத்தின. மேலும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் மியான்மர், வங்கதேசம், தாய்லாந்து நாடுகளையும் தொடர்பு கொண்டு மாயமான மீனவர்களை தேட வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இந்நிலையில், செப்டம்பர் 15ம் தேதி காசிமேடு மீனவர்கள் 9 பேரை மியான்மர் கடற்பகுதியில் அந்நாட்டு கடற்படையினர் மீட்டனர்.

மோசமான வானிலை காரணமான மீனவர்களின் கடல்வழி பயணம் ரத்தானது. இதனையடுத்து, மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் மியான்மரில் இருந்து டெல்லி வழியாக விமானம் மூலம் மீனவர்கள் சென்னை விமான நிலையம் அழைத்து வரப்பட்டனர்.

விமான நிலையத்தில் மீனவர்களுக்கு சால்வை அணிவித்து, ஊக்கத்தொகை கொடுத்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வரவேற்பு அளித்தார்.

Views: - 50

0

0