‘கேரளா பட்டினிதான் கிடக்கும்’ : வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய பினராயி விஜயன்..!!!

31 December 2020, 12:16 pm
kerala assembly - updatenews360
Quick Share

திருவனந்தபுரம் : புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

டெல்லி : வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை நேர்மறையாக முடிந்துள்ளதாக மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள், டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடனான தொடர் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து, இந்தப் போராட்டம் 35 நாட்களை கடந்து விட்டது. இந்தப் போராட்டத்திற்கு கேரளா, மேற்கு வங்கம் பல்வேறு மாநிலங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
மேலும், வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களும் தீர்மானங்களை நிறைவேற்றி வருகின்றன.

இந்த நிலையில், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதற்காக கேரள சட்டப்பேரவைக் கூட்டத்தின் சிறப்பு அமர்வை கூட்ட கடந்த 23ம் தேதி ஆளுநருக்கு அமைச்சரவை பரிந்துரை செய்தது. ஆனால், ஆளுநர் ஆரிப் முகமது கான் இதனை நிராகரித்தார். இதனால், ஆளுநருக்கு எதிராக ஆளும் மார்க்சிஸ்ட் மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து, மீண்டும் கேரள அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், கேரள சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 3 புதிய வேளாண் சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை முதலமைச்சர் பினராயி விஜயன் கொண்டு வந்தார்.

அப்போது, புதிய வேளாண் சட்டங்களால் கேரள மாநிலமும் பாதிக்கப்படும் சூழல் இருப்பதாகவும், பிற மாநிலங்களில் இருந்து வரும் உணவுப் பொருட்கள் வழங்குவதை நிறுத்தினால் கேரளா பட்டினிதான் கிடக்கும் எனவும் அவர் கூறினார்.

Views: - 1

0

0