கேரளாவில் கொரோனா தொடர்ந்து உச்சம்: ஒரே நாளில் 7,871 பேருக்கு தொற்று உறுதி..!

Author: Babu
6 October 2020, 7:33 pm
Delhi Corona- Updatenews360
Quick Share

கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், இன்று மேலும் 7,871 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தென் இந்தியாவில் கொரோனா தென்பட்டமான முதல் மாநிலமான கேரளாவில், ஆரம்பத்தில் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. பின்னர், கொரோனாவின் 2வது அலை வீசத் தொடங்கியுள்ளது. இது அம்மாநில அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மத்திய அரசு தளர்வுகள் அறிவித்து வரும் நிலையில், தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் கேரளாவில் உச்சம் பெற்றே வருகிறது. இன்று மட்டும் 7,871 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கேரளாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 87,738 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 111 பேர் சுகாதார பணியாளர்களாவர். மேலும், 25 பேர் பலியான நிலையில், 4,891 பேர் டிஸ்சார்ஜாகியுள்ளனர்.

Views: - 47

0

0