கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு : மத்திய அரசு!!

8 August 2020, 3:38 pm
Dubai
Quick Share

டெல்லி : கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்க்ளுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் நேற்று துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோட்டிற்கு வந்து தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

கொரோனாவால் நாடே துவண்டு போயுள்ள நிலையில், பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த துயர சம்பவத்திற்கு மாநில அரசின் சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என விமான போக்குவரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார். மேலும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ. 2 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Views: - 11

0

0