கேரளாவையே உலுக்கிய தங்கக் கடத்தல் வழக்கு : ஸ்வப்னா சுரேஷுக்கு கிடைத்து ஜாமீன்..!

Author: Babu
5 October 2020, 7:57 pm
Kerala_gold_smuggling_Updatenews360
Quick Share

கொச்சி : கேரளாவையே உலுக்கி வரும் தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷுக்கு கொச்சி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநில அரசியலையே உலுக்கி வரும் தங்கக் கடத்தல் வழக்கில் இதுவரையில் ஸ்வப்னா சுரேஷ் உள்பட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது ஆட்சியில் இருக்கும் பினராயி விஜயன் தலைமையிலான ஆளுங்கட்சியுடன் முக்கிய புள்ளியான ஸ்வப்னா சுரேஷுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதால், முக்கிய பிரமுகர்களுக்கும் இந்த வழக்கில் தொடர்பிருக்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளனது. எனவே, இந்த வழக்கு குறித்து மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் தன்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரி ஸ்வப்னா சுரேஷ் தொடர்பு மனுக்களை தாக்கல் செய்து வந்தார். ஆனால், விசாரணை பாதிக்கும் எனக் கூறி அவரது ஜாமீன் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்து வந்தது.

இந்த நிலையில், கேரள தங்கக் கடத்தல் தொடர்பான சுங்கத்துறையின் வழக்கில் ஸ்வப்னாவுக்கு கொச்சி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. 60 நாட்கள் கடந்தும் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் ஜாமீன் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தாலும், என்ஐஏ வழக்கில் விசாரணையை எதிர்கொண்டு வருவதால் அவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 46

0

0