மறுபடியும் முதலில் இருந்து…! ஒரே நாளில் கேரளாவில் 62 பேருக்கு கொரோனா

23 May 2020, 9:19 pm
Corona Vaccine_UpdateNews360
Quick Share

திருவனந்தபுரம்: கேரளாவில் புதிதாக 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் கொரோனா முழுக்கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் அண்மைக்காலமாக அதிகளவு நோய் தொற்றுகள் பதிவாகி வருகின்றன.

இந்நிலையில், கேரளாவில் இன்று புதிதாக 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 62 பேரில், 18 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்.

எஞ்சியவர்களில் 12 பேர் மகாராஷ்டிராவில் இருந்து வந்தவர்கள் ஆவர். 31 பேர் வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்கள். இதன் மூலம் கேரளாவில் ஒட்டுமொத்தமாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 794 ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவ கண்காணிப்பில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 275 ஆக இருக்கிறது. இதுவரை 515 பேர் குணமடைந்துள்ளனர் என்ற சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply