16 வகையான காய்கறிகளுக்கு குறைந்த பட்ச விலை நிர்ணயம் : கேரள அரசு அதிரடி முடிவு…!

23 September 2020, 4:16 pm
pinarayi_vijayan_UpdateNews360
Quick Share

வரும் நவம்பர் 1ம் தேதி முதல் வாழைப்பழம், அன்னாசி உள்பட 16 வகையான விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்ய கேரள அரசு முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் வேளாண் திருத்த சட்ட மசோதாவுக்கு எதிர்ப்புகளும், ஆதரவுகளும் கிளம்பி வருகின்றன. இதனிடையே, இந்த மசோதாவினால் தமிழகத்திற்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்றும், விவசாயிகளுக்கு சாதகமான நடவடிக்கைகளையே தமிழக அரசு மேற்கொண்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில், . வாழைப்பழங்கள், அன்னாசி, மரச்சீனி கிழங்கு, தடியங்காய், வெள்ளரி, பாகற்காய், புடலங்காய், பயறு, தக்காளி, வெண்டைக்காய், முட்டைக்கோஸ், கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், பீட்ரூட், பூண்டு ஆகிய 16 வகையான விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்ய கேரள அரசு முடிவு செய்துள்ளது. குறைந்தபட்ச விலையை நிர்ணயிப்பது குறித்த விவாதங்கள் இறுதி கட்டத்தில் இருப்பதாகவும், விரைவில் அதற்கான அறிவிப்பை முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிடுவார் என்று விவசாயத்துறை தெரிவித்துள்ளது.

குறைந்தபட்ச விலையை விட சந்தைவிலை குறைவாக இருப்பின், அந்த விலையை அரசாங்கமே ஏற்கும் என்றும், ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்ச விலை நிர்ணயிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.