வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு : சட்ட ரீதியாக மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க கேரள அரசு திட்டம்…!

24 September 2020, 2:11 pm
Pinarayi_Vijayan_Updatenews360 (2)
Quick Share

மத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக சட்டத்துறை வல்லுநர்களிடம் ஆலோசனை செய்ய கேரள அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த 20ம் தேதி எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வேளாண் மசோதாக்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியது. இதை எதிர்த்து, பல்வேறு மாநிலங்களில் விவசாயிகளும், விவசாய சங்கங்களும், அரசியல் கட்சிகளும் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், வேளாண் மசோதாவை எதிர்க்கும் மாநிலங்களில் ஒன்றான கேரள அரசு, தற்போது சட்ட நடவடிக்கையை எடுக்க முடிவு செய்துள்ளது. இதற்காக, கேரள சட்டத்துறை அமைச்சகத்தின் கருத்துக்களை கேட்க முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள முதலமைச்சர் பினராயி விஜயன், “மத்திய அரசின் வேளாண் மசோதாக்கள் விவசாயிகளின் வாழ்க்கையை துயரத்தில் ஆழ்த்துகிறது. வேளாண் மசோதாவுக்கு எதிராக குரல் கொடுத்த எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்தது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்,”
எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 0 View

0

0