கொரோனா, நிஃபாவைத் தொடர்ந்து கேரளாவை புரட்டிப்போடும் கனமழை… 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!!!

Author: Babu Lakshmanan
16 October 2021, 4:50 pm
kerala heavy rain - updatenews360
Quick Share

கேரளாவில் கனமழை பெய்து வரும் நிலையில், 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது அங்குள்ள மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

கேரளாவில் கடந்த ஓராண்டாகவே இயற்கை சீற்றங்கள் அதன் கோர முகத்தை காட்டி வருகின்றன. கொரோனாவால் நிலைகுலைந்து போன போது, நிஃபா வைரஸும் பதிலுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது. எனவே, இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வர கேரள மக்கள் போராடி வருகின்றனர். இந்த நிலையில், அம்மாநிலத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், அங்குள்ள மக்கள் நிம்மதியை இழந்துள்ளனர்.

Kerala Corona - updatenews360

அரபிக் கடல் மற்றும் வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக, கேரளத்தில் நேற்றிரவு இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால், கேரளாவில் பத்தினம் திட்டா, எர்ணாகுளம், கோட்டயம், இடுக்கி, திரிசூர் ஆகிய 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

Rain - Updatenews360

இதனிடையே, தொடர் மழை பெய்து வருவதால் கேரளாவில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மேலும், நீர்நிலைகளுக்கு அருகில் செல்ல வேண்டாம் என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.

கடவுளின் தேசம் எனப்படும் கேரளாவை, இயற்கை சீற்றங்களிடம் இருந்து அந்தக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் பிரார்த்தித்து வருகின்றனர்.

Views: - 190

0

0