4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை : கேரளாவில் 6ம் தேதி வரை பிளந்து கட்ட போகும் கனமழை..!

3 August 2020, 4:24 pm
Heavy rain - updatenews360
Quick Share

கேரளாவில் வரும் 6ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவின் வட இந்திய மாநிலங்களான அஸ்ஸாம், பீகார் ஆகிய மாநிலங்களில் பெய்த பேய் மழைக்கு, ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்தனர். மேலும், பலரின் உயிர்களும் பறிபோனது. இப்படி, வட இந்தியாவை உலுக்கி வந்த கனமழை தற்போது, தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவை தற்போது எட்டிப் பார்த்துள்ளது.

அதாவது, வரும் 6ம் தேதி வரையில் கேரளாவில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே, கேரளா மாநிலத்தின் இடுக்கி, கோழிக்கோடு, காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், வானிலை ஆய்வு மையத்தின் இந்த எச்சரிக்கை மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் 20 செ.மீ. வரை மழை பெய்யும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இந்த எச்சரிக்கையை தொடர்ந்து, கேரளாவில் பேரிடர் மேலாண்மை குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

Views: - 36

0

0