கேரளாவை விடாத கொரோனா…! இன்றும் 131 பேருக்கு பாதிப்பு

30 June 2020, 10:11 pm
corona virus attack kerala -updatenews360
Quick Share

திருவனந்தபுரம்: கேரளாவில் மேலும் 131 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.

நாட்டின் பல பகுதிகளில் பரவலாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது. ஆனாலும் கேரளாவில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. இப்போது நிலைமை தலைகீழாகி வெளி நாடு, வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களால் மீண்டும் கொரோனா அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இன்று மட்டும் புதிதாக 131 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 4,442 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து வந்த 111 பேர் உட்பட 131 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2,112 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று ஒரேநாளில் 75 பேர் குணம் பெற, ஒட்டுமொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 2,304 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் தொடர்ந்து 12வது நாளாக 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply