கேல் ரத்னா விருதுக்கு தங்க மகன் நீரஜ் சோப்ரா பெயர் பரிந்துரை : அஸ்வின், மிதாலி ராஜ் உள்ளிட்டோரின் பெயர்களும் சிபாரிசு..!!

Author: Babu Lakshmanan
27 October 2021, 6:57 pm
khel ratna award - updatenews360
Quick Share

கேல் ரத்னா விருதுக்காக ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் மிதாலி ராஜ் உள்ளிட்ட 11 பேரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

விளையாட்டு துறையில் சிறந்து விளங்குபவர்களை கவுரவிக்கும் விதமாக, அர்ஜுனா, கேல் ரத்னா மற்றும் துரோணாச்சார்யா விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. அதன்படி, கடந்த 2017 – 2020ம் ஆண்டு வரையிலான காலகட்டத்திற்கு விருது பெற தகுதியுடையவர்களின் பெயர்களை பரிந்துரை செய்யுமாறு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.

அதன்படி, பல்வேறு விளையாட்டுக்களின் சம்மேளனமும் வீரர், வீராங்கனைகளின் பெயர்களை பரிந்துரை செய்து வருகிறது. ஏற்கனவே, கேல் ரத்னா விருதுக்காக அஸ்வின், மிதாலி ராஜ் ஆகியோரின் பெயர்களும், அர்ஜுனா விருதுக்காக பும்ரா, கேஎல் ராகுல், ஷிகர் தவான் ஆகியோரின் பெயர்களையும் பிசிசிஐ பரிந்துரை செய்திருந்தது.

இந்த நிலையில், ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, ரவி தாஹியா, ஸ்ரீஜேஷ், லவ்லினா, சுனில் சேத்ரி, பிரமோத் பகத், சுமித் அண்டில், அவனி லெகாரா, கிருஷ்ணா நாகர், நார்வால் ஆகிய 11 பேரின் பெயர்கள் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் 35 பேரின் பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Views: - 131

0

0