2024ல் மீண்டும் மோடி பிரதமரானால்தான் நாடு முன்னேறும் : நடிகை குஷ்பு பேச்சு…!!

Author: Babu Lakshmanan
17 September 2021, 1:28 pm
Khushbu -Modi - updatenews360
Quick Share

சென்னை : 2024ம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் மோடி பிரதமரானால் தான், இந்தியா முன்னேறும் என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் 71வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னை தி.நகரில் பாஜக அறிவுசார் பிரிவின் சார்பில் மோடியின் பெருமைகள், சாதனைகள் விளக்கும் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது. இதனை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாஜக பிரமுகர் குஷ்பு பேசுகையில், “நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் பிரதமர் மோடி. எதிர்க்கட்சியினர் வெறும் விமர்சனங்களை மட்டுமே முன்வைத்து வருகின்றனர். ஆனால், பிரதமர் மோடியே, சேவை செய்வதையே வாழ்க்கையாகக் கொண்டிருக்கிறார்.

71 என்பது வெறும் நம்பர் தான். 71 வயது இளைஞர் மோடி. சினிமா ஹீரோக்களை விட, மோடி தான் ரியல் ஹீரோவாக தெரிகிறார். அவர் தன் குடும்பத்துக்காக எதையும் செய்துகொண்டதில்லை, 2024ல் மீண்டும் மோடி பிரதமராக வந்தால் தான் நாடு முன்னேறும்,” எனக் கூறினார்.

Views: - 378

0

0