திமுக தலைவர்களை விமர்சித்ததாக கைது செய்யப்பட்ட கிஷோர் கே. சுவாமி மீது குண்டர் சட்டம் : போலீசார் நடவடிக்கை..!!

25 June 2021, 1:26 pm
kishore k swamy - updatenews360
Quick Share

திமுக தலைவர்கள் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட சமூகவலைதள பிரபலம் கிஷோர் கே. சுவாமி மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் குறித்து சமூகவலைதளங்களில் அவதூறு பேசியதாக திமுக ஐடி பிரிவு சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், நேற்றி நள்ளிரவில் சமூக வலைத்தள பிரபலம் கிஷோர் கே. சுவாமியை கைது செய்தனர். பின்னர், மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த சங்கர் நகர் போலீசார், தாம்பரம் கிளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு அவருக்கு 28ம் தேதி வரை நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து, கிஷோர் கே சாமி சைதாபேட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே, கிஷோர் கே. சுவாமியின் கைது நடவடிக்கைக்கு பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பல்வேறு வழக்குகள் அவர் மீது இருப்பதால், சமூகவலைதள பிரபலம் கிஷோர் கே. சுவாமி மீது குண்டாஸ் சட்டத்தை போலீசார் போட்டுள்ளனர்.

Views: - 107

0

0