வரும் 21ம் தேதி கொங்கு மாவட்ட திமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்

Author: Babu
14 October 2020, 1:54 pm
Duraimurugan - Updatenews360
Quick Share

சென்னை : சேலம், கரூர் உள்பட கொங்கு மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் வரும் 21ம் தேதி நடைபெறுகிறது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, திமுக தேர்தல் தயாரிப்பு குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த நிலையில், சேலம், கரூர் உள்பட கொங்கு மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் வரும் 21ம் தேதி நடைபெறுவதாக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- கழகத்‌ தலைவர்‌ மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ தலைமையில்‌ கொங்கு மண்டலத்தைச்‌ சேர்ந்த கரூர்‌, நாமக்கல்‌, சேலம்‌, ஈரோடு, திருப்பூர்‌ கோவை ஆகிய கழக மாவட்டங்களைச்‌ சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்க்‌ கழகச்‌ செயலாளர்கள்‌/ பொறுப்பாளர்கள்‌ கூட்டம்‌, வருகிற 21-10-2020, புதன்கிழமை, காலை 10.00 மணி அளவில்‌ சென்னை, அண்ணா அறிவாலயம்‌, கலைஞர்‌ அரங்கத்தில்‌ நடைபெறும்‌.

அதுபோது பேற்குறிப்பிட்டுள்ள செயலாளர்கள்‌/ பொறுப்பாளர்கள்‌ மட்டும்‌ தவறாது கலந்து கொள்ள வேண்டுமென
கேட்டுக்‌ கொள்கிறேன்‌, எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 36

0

0