விஸ்வரூபம் எடுத்த ‘கொங்கு நாடு’ : பதறும் கம்யூ., பாஜக ‘பளீர்’பதிலடி!!

11 July 2021, 7:01 pm
Kongu Nadu - Updatenews360
Quick Share

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறையின் இணை அமைச்சராக தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் எல்.முருகன் பதவி ஏற்றபோது, அவரைப் பற்றிய மத்திய அரசின் சுய விவரக் குறிப்பில், தமிழகத்தின் கொங்கு நாடு என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தமிழகம் கொங்கு நாடு, வட தமிழ்நாடு, தென் தமிழ்நாடு என மூன்று மாநிலங்களாக பிரிக்கப்படலாம் என்று செய்தி ஊடகங்களில் உலா வரத்தொடங்கியது.

Can the Kongu Nadu region be separated from Tamil Nadu Planning for Union  Territory?

மத்திய அரசு விரைவில் கொங்கு நாட்டை தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்க திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் டெல்லியில் தகவல்கள் ரெக்கை கட்டி பறக்க ஆரம்பித்தன. இதை மத்திய அரசோ, மாநில பாஜகவோ மறுக்காததால் தமிழக அரசியல் களம் அனல் பறந்தது.

கொங்குநாடு தனி மாநிலமாக அறிவிக்கப்படலாம் என்று வெளியான செய்தியால் திமுகவை விட அதிகமாக அதிர்ந்துபோனது காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவைதான்.

இதனால் பாஜக- திமுக கூட்டணி கட்சிகளிடையே கடும் மோதலும் ஏற்பட்டது. தொலைக்காட்சி, சமூக ஊடகங்களின் மேடை அதகளம் ஆனது. மீம்ஸ்களும் நூற்றுக்கணக்கில் வலம் வரத் தொடங்கின. கொங்கு நாட்டுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் டுவிட்டரில் ஹேஸ்டேக்குகளும் ட்ரெண்ட் செய்யப்பட்டன.

mutharasan

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் கூறும்போது,
“தமிழகத்தில் கொங்கு மண்டலத்தைத் தனியாகப் பிரித்து யூனியன் பிரதேசமாக மாற்ற வேண்டும் என்று பாஜகவினர் கூறுவது ஆபத்தானது. மொழி வாரி மாநில அடிப்படையில் அமைக்கப்பட்ட தமிழகத்தில் கொல்லைப்புறமாக பாஜக நுழைய நினைத்தால் அதற்கான எதிர்விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். இந்த விவகாரத்தை அனைத்து அரசியல் கட்சியினரும் ஒன்றுசேர்ந்து முறியடிக்க வேண்டும். காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்திட தமிழக அரசு அக்கறை காட்டவேண்டும்” என்று குறிப்பிட்டார்.

Nanguneri seat Will the Congress contest KS Azhagiri Answer || நாங்குநேரி  தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுமா? கே.எஸ்.அழகிரி பதில்

இந்திய கம்யூனிஸ்ட்டின் மாநில பொதுச் செயலாளர் முத்தரசன் கூறும்போது, “தற்போது பாஜகவும் அதன் பரிவாரங்களும் மேற்கு மாவட்டங்களை குறி வைத்து பிளவுவாத அரசியல் கருத்துகளை பரப்புகிறதோ என்ற ஆழமான சந்தேகம் எழுகிறது. இப்பகுதியில் அமைதியாகவும், நல்லிணக்கத்தோடும் வாழ்ந்து வரும் மக்களிடம் வெறுப்பு மற்றும் பகை அரசியலை வளர்ப்பதற்கு கொங்கு நாடு என்ற விஷ விதை தூவும் மத்திய அரசின் திட்டம்
புலி வால் பிடித்த கதையாக முடியும் என்பதை எச்சரிக்கிறோம்.

அரசியல் ஆதாயத்துக்காக மத்திய பாஜக அரசு திட்மிட்டுள்ள விஷம விளையாட்டை, தமிழக மக்கள் அனைவரும் கட்சி அரசியல் எல்லைகளைக் கடந்து, ஓரணியாக திரண்டு முறியடிக்க முன் வர வேண்டும்” எனக்கூறி இருக்கிறார். இதேபோல் காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி எம்பியும் தனது எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்.

இதுபற்றி தமிழக பாஜகவின் கொங்கு மண்டல மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது,”கொங்கு நாடு விவகாரத்தில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் காங்கிரசும் ஏன் இப்படி கதறுகின்றன என்று புரியவில்லை. மாநிலத்தில் பிளவை ஏற்படுத்துவதுபோல் பாஜக செயல்படுவதாக இவர்கள் கூறுவது தவறு.

Jothimani S.: Striving to be a true people's representative - The Week

இளைஞர்களின் மனதில் நாட்டை துண்டாடும் பிரிவினைவாத எண்ணத்தை தூண்டிவிடும் கம்யூனிஸ்டுகள், பாஜக விஷ விதை தூவுவதாக சொல்வது மிகச் சிறந்த நகைச்சுவை.

கொங்கு நாடு என்ற கோரிக்கை 35 ஆண்டுகளுக்கு மேலாக மேற்கு மண்டல மக்களால் எழுப்பப்பட்டு வருகிறது. கொங்கு மண்டல பகுதி மக்கள் தங்களுக்கு அநீதி இழைக்கப்படும் போதெல்லாம் பொங்கி எழத் தவறியதில்லை.

கோவை மக்கள் திமுக கூட்டணிக்கு வாக்களிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக கொரோனா தடுப்பூசி செலுத்துவதில், இதுவரை இங்கே அரசு போதிய கவனம் செலுத்தவில்லை. கொங்கு மண்டலத்தில் உள்ள பல மாவட்டங்களிலும் இதே நிலைதான். தடுப்பூசிக்காக
மக்கள் அதிகமாக அலைக்கழிக்கப்பட்டதும் கொங்கு மண்டலத்தில்தான்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சென்னையில் 2,500 கோடி ரூபாய் மதிப்பில் 4 பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்படுகிறது. ஆனால் கொங்கு மக்களின் நீண்ட கால கோரிக்கையான காவிரி -குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த திமுக அரசு தயக்கம் காட்டுகிறது.

கொங்கு நாடு தனி மாநிலமாக உருவாகும் என்ற செய்தி வெளியான பின்புதான் கம்யூனிஸ்ட் கட்சியினர் காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம் பற்றி மிகுந்த அக்கறையோடு பேசுகின்றனர். அதற்கு முன் இதுபற்றி அவர்கள் வாய்திறந்து இருப்பார்களா? என்பது சந்தேகம்தான்.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு எதற்காக கொங்கு நாடு என்ற ஒரு கேள்வியை கம்யூனிஸ்ட் கட்சியினர் முன் வைக்கின்றனர். மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு முன்பே 1953-ல் ஆந்திர மாநிலம் உருவாகிவிட்டது. 61 ஆண்டுகளுக்கு பிறகு 2014-ல் ஆந்திராவிலிருந்து தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது. இந்த இரு மாநில மக்களுமே பேசுகிற மொழி தெலுங்குதான். ஆந்திராவின் கடும் எதிர்ப்பையும் மீறித்தான் தெலுங்கானா உருவானது. இதுபோல பல மாநிலங்கள் இதற்கு இடைப்பட்ட காலத்திலும் உருவாக்கப்பட்டு
உள்ளன.

ஒரு மாநிலத்தின் சம்மதத்தைப் பெறாமல் அந்த மாநிலத்தை பிரிக்க முடியாது என்று கூறுவதும் தவறான வாதம். காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது, அந்த மாநிலத்தின் கருத்து கேட்கபடாமலேயே நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆந்திரா பலத்த எதிர்ப்பு தெரிவித்தபோதும் தெலுங்கானாவை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உருவாக்கியது.

நாட்டின் எல்லையில் சீனாவாலும், பாகிஸ்தானாலும் நமக்கு ஏதாவது பாதுகாப்பு அச்சுறுத்தல் என்றால் கம்யூனிஸ்டுகளும், காங்கிரசும் வாயை மூடிக் கொள்வார்கள். மாறாக மத்திய பாஜக அரசை கோபமூட்டும் வகையில் கிண்டலும் கேலியும் செய்வது இவர்களின் வழக்கம்.

தேசப்பற்றே இல்லாத இவர்கள், மாநிலப் பற்று குறித்து வாய் நிறைய பேசுவதும் வேடிக்கை.
தேசப்பற்று கொண்ட எல்லோருக்கும் மாநிலப் பற்றும், மொழிப் பற்றும் தானாகவே வந்துவிடும்.
எனவே நாட்டுப் பற்றே இல்லாத, எந்த நேரமும் சீனாவையே துதி பாடிக் பாடிக்கொண்டிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியினரும், காங்கிரசாரும் தங்களை முதலில் திருத்திக் கொள்ளவேண்டும்.

ஒரு மாநிலத்தில் அத்தனை மாவட்டங்களும் பரவலான வளர்ச்சியை பெறவில்லை என்றால் பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் தனி மாநிலக் கோரிக்கையை வைக்கத்தான் செய்வார்கள். அதேபோல் இப்பகுதி மக்கள் எங்களுக்கு ஓட்டுப் போட்டார்கள், அவர்கள் ஓட்டு போடவில்லை என்றெல்லாம் பேதம் பார்க்காமல் அனைத்து மக்களையும் சமமாக பாவிக்க வேண்டும். மாறாக, நீங்கள் வாக்களிக்கவில்லை என்றாலும் கூட உங்களுக்காக நாங்கள் பணியாற்றுவோம் என்று வெளிப்படையாக சொல்வதே ஆணவம் நிறைந்த ஒன்றுதான்.

PM Narendra Modi, Amit Shah Credit Yogi Adityanath's Policies For UP Local  Poll Win

திடீரென 60 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவும் அதன் தோழமை கட்சிகளும் தொடர்ந்து அழைத்து வரும் நிலையில் கொங்கு நாடு என்று சொன்னால் மட்டும் அதை ஏன் தவறாக சிந்திக்கிறார்கள், புலம்புகிறார்கள் என்பதுதான் புரியவில்லை. உங்களுக்கு வந்தால் அது ரத்தம். எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? “என்று ஆவேசப்பட்டார்.

இப்படி இரு தரப்பினரும் ஊடகங்கள் வாயிலாக மோதிக்கொண்டிருக்க கொங்கு நாடு விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருப்பது போலவே தோன்றுகிறது. இந்த நிலையில், மேற்கு மண்டலத்தை கொங்குநாடு என அறிவிக்க கோரி டிவிட்டரில் #கொங்கு நாடு என்ற ஹேஷ்டெக் 2-வது நாளாக இன்றும் டிரெண்டானது.

Views: - 170

1

0