‘கொங்குநாடு தனிமாநிலம்’ தீவிரம் காட்டும் கொங்கு அமைப்புகள் : கோவையில் கொ.வ.க.பே. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

17 July 2021, 7:01 pm
kongu nadu- updatenews360
Quick Share

சென்னை : கொங்கு நாடு தனி மாநிலம் உருவாக்கக் கோரி கொங்கு வேளாளக்‌ கவுண்டர்கள்‌ பேரவையின் கோவை மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- மாநில கொங்கு வேளாளக்‌ கவுண்டர்கள்‌ பேரவையின்‌ கோவை மாவட்ட செயற்குழு கூட்டம்‌ மாநில தலைமை அலுவலகத்தில்‌ 17.07.2021 அன்று மதியம்‌ நடந்தது. கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர்‌ வழக்கறிஞர்‌ 5.2. ராஜேந்திரன்‌ அவர்கள்‌, மாநில பொதுச்செயலாளர்‌ தேவராஜ்‌ அவர்கள்‌, மாநில பொருளாளர்‌ தேவராஜ்‌ அவர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

கூட்டத்திற்கு கோவை மாநகர தலைவர்‌ கஸ்தூரி தலைமை வகித்தார்‌. மாநகர செயலாளர்‌ ௩. ராமசாமி. பொருளாளர்‌ ராம்நகர்‌ மணி முன்னிலை வகித்தனர்‌. கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட தலைவர்‌ பார்த்திபன்‌, செயலாளர்‌ ரமேஷ்‌. பொருளாளர்‌ செல்வராஜ்‌, வடக்கு மாவட்ட தலைவர்‌ ஒன்னிபாளையம்‌, மருதாசலம்‌, செயலாளர்‌ செந்தில்‌, பொருளாளர்‌ கருப்புசாமி மற்றும்‌ இளைஞரணி செயலாளர்‌ பிரசாந்த், மற்றும்‌ மாவட்ட நிர்வாகிகள்‌ வேலுச்சாமி முரளிதரன்‌, செந்தோட்டம்‌ சின்னச்சாமி, பீளமேடு பழனிச்சாமி, ரத்தினபுரி மோகன்‌ பொறியாளர்‌ மோகனசுந்தரம்‌, சித்தாபுதூர்‌ செந்தில்குமார்‌, சிவானந்தா மில்‌ கார்த்தி, பிரபு, மதுக்கரை மதன்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டு கீழ்கண்ட தீர்மானங்கள்‌ நிறைவேற்றப்பட்டது.

 1. தனிப்‌ பெரும்பான்மையுடன்‌ ஆட்சி அமைத்த தமிழக முதல்வர்‌ ஸ்டாலின்‌ அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌.
 2. முந்தைய அரசு செய்துகொண்டிருந்த நலத்திட்டங்களை தொடர்ந்து மக்கள் பயனடையும் விதத்தில் செய்து முடிக்க வேண்டும்‌ என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்‌.
 3. நிர்வாக வசதிக்காக மக்கள்‌ தொகை அடிப்படையில்‌ மாவட்டம்‌ மற்றும்‌ தொகுதியை பிரிப்பது போல கொங்கு நாட்டில்‌ வசிக்கும்‌ மக்களின்‌ வளர்ச்சிக்கும்‌ தொழில்‌ வளர்ச்சிக்கும்‌ தமிழ்‌ நாட்டிலிருந்து கொங்கு நாட்டை
  பிரித்து கொங்கு நாடு என்று தனி மாநிலம்‌ உருவாக்குவதற்கு ஆதரவு தெரிவிப்பது,
 4. கொரோனவால்‌ உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலியும்‌ அவர்களை இழந்து வாடும்‌ குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த அனுதாபம்‌ தெரிவித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வது.
 5. மருத்துவர்‌ தினத்தை முன்னிட்டு கணபதி பாரி‘ மருத்துவமனைக்கு கொங்கு நாடு அறக்கட்டளையின்‌ சார்பாக மூன்று ஆக்சிஜன்‌ சிலிண்டர்கள்‌ இலவசமாக
  வழங்கியதற்கு நன்றி தெரிவிப்பது.
 6. சென்னையில்‌ 1500 கோடியில்‌ பூங்காக்களை உருவாக்க திட்டமிடும்‌ அரசு கொங்கு நாட்டில்‌ 500 கோடியில்‌ உள்கட்டமைப்பு வசதி ஏற்படுத்தித்‌ தர வேண்டும்‌.
 7. காவிரி டெல்டா மாவட்டத்தில்‌ விளைவித்த நெல்லை விற்கும்‌ வரை மழையில்‌ நனையாமல்‌ பாதுகாக்க போர்க்கால அடிப்படையில்‌ தமிழக அரசு தகர கொட்டாய்‌
  அமைத்து தர வேண்டும்‌
 8. மத்திய மாநில அரசுகள்‌ ஜாதிவாரி கணக்கெடுத்து மக்கள்‌ தொகை அடிப்படையில்‌ இட ஒதுக்கீட்டை மாற்றி அமைத்து ஒவ்வொரு ஜாதிகளுக்குள்‌ நடக்கும்‌ கலவரத்தை தடுக்க வேண்டும்‌.
 9. நீட்‌ தேர்வுக்கு தமிழக அரசு ஏழை மாணவ மாணவிகளுக்கு இலவசமாக உண்ண உணவு, உடுக்க உடை இருக்க இருப்பிடம்‌ கொடுத்து அனைத்து மாவட்டத்திலும்‌ இலவசமாக பயிற்சி மையங்கள்‌ அமைத்து தர வேண்டும்‌.
 10. மேகதாது அணை பிரச்சனை தொடர்பாக தமிழக அரசு எடுக்கும்‌ முடிவுக்கு மாநில கொங்கு வேளாளக் கவுண்டர்கள்‌ பேரவை முழு ஆதரவு கொடுப்பதெனு தீர்மானிக்கப்பட்டது.

கூட்ட முடிவில்‌ கிழக்கு மாவட்ட பொருளாளர்‌ செல்வராஜ்‌ அவர்கள்‌ நன்றியுரை கூறினார்‌.

Views: - 230

0

0