முருகேசன் கொலைக்கு டாஸ்மாக் கடைகளைத் திறந்த தமிழக அரசே முழுக்காரணம் : கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு..!!

23 June 2021, 8:45 pm
krishnasamy - stalin updatenews360
Quick Share

சென்னை : போலீசாரால் தாக்கப்பட்டு வியாபாரி உயிரிழந்த சம்பவத்திற்கு தமிழக அரசே முழுக்காரணம் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

சேலம் மாவட்டம் கல்வராயன் மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி வனத்துறை சோதனை சாவடியில் பாதுகாப்பு குடிபோதையில் இருந்த வியாபாரி போலீசார் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், போலீசாரின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து வரும் அரசியல் தலைவர்கள், உயிரிழந்த வியாபாரியின் குடும்பத்திற்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், போலீசார் தாக்கியதில் வியாபாரி உயிரிழந்த சம்பவத்திற்கு தமிழக அரசே முழுக்காரணம் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “முருகேசனின் மரணத்திற்கு காவலர்களின் தாக்குதல் காரணமாகக் காட்டப்பட்டாலும், TASMAC கடைகளைத் திறந்ததே முழு முதல் காரணம்.

முருகேசன் கொலைக்கு டாஸ்மாக் கடைகளைத் திறந்த மாநில அரசே முழு பொறுப்பேற்க வேண்டும். இனியாவது டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடிட வேண்டும்.

கழக கண்மணிகளின் மதுபான ஆலைகளில் வரும் வருமானத்தைக் கணக்கில் கொண்டும், அரசின் கஜானா நிரம்ப வேண்டும் என்ற அடிப்படையிலும் யார் குடும்பம் எக்கேடு கெட்டுப் போனால் என்ன? என்று எண்ணித்தானே டாஸ்மாக் கடைகளைத் திறந்தீர்கள்? இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ? தெரியவில்லை.

முருகேசன் கொலைக்கு வழக்குப் பதிவு செய்து, காவலர்கள் கைதுதோடு முடிந்து விட்டதாக கருதக்கூடாது. கொரோனா காலத்தில் டாஸ்மாக் கடைகளைத் திறக்கக் பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், முதல்வர் உத்தரவின் பேரில் கடைகள் திறக்கப்பட்டதாலேயே இந்த கொடிய செயல் அரங்கேறியுள்ளது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 219

1

0