இங்கு அடிமை ஆட்சி நடத்துவது யார்..? அதிமுகவா… திமுகவா…. : முதலமைச்சர் ஸ்டாலினை வெளுத்து வாங்கிய கிருஷ்ணசாமி..!!

Author: Babu Lakshmanan
21 September 2021, 5:15 pm
krishnasamy - stalin updatenews360
Quick Share

சென்னை : திமுக தலைமையிலான தமிழக அரசில் நிகழ்வுகளை சுட்டிக்காட்டி, இங்கு யார் அடிமை ஆட்சியை நடத்துகிறார்கள் என்று தெரியவில்லை என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

நீட் தேர்வு அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, மேலும் ஒரு மாணவி தீக்குறித்து தற்கொலைக்கு முயன்றார். தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்வதாக அறிவித்து விட்டு, மாணவர்களின் வாழ்க்கையில் திமுக விளையாடுவதாக எதிர்கட்சிகள் தமிழக அரசை விமர்சித்து வருகின்றன.

இந்த நிலையில், தமிழகத்தில் அடிமை ஆட்சி நடத்துவது அதிமுகவா..? திமுகவா..? என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது :- கடந்த ஆட்சியின் போது நீட் தேர்வு அச்சத்தால் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட போது, எடப்பாடி பழனிசாமியின் அரசை அடிமை அரசு என்று திமுக விமர்சித்து வந்தது. தற்போது, திமுக பதவியேற்ற பிறகு 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆனால், இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினிடம் ஊடகங்கள் இதுபற்றி எந்தவித கேள்வியும் எழுப்பவில்லை. 12ம் தேதி நீட் தேர்வு நடக்கும் போது, 13ம் தேதி தீர்மானம் போடுவதில் என்ன பலன் இருக்கிறது. 9ம் தேதியே தீர்மானம் போட்டிருக்க வேண்டும்.

தேர்தலுக்கு முன் திமுக கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் பறந்து விட்டன. திமுக ஆட்சிக்கு வந்து 4 மாதங்களாகின்றன. 2 ஜிஎஸ்டி கூட்டங்கள் நடந்துள்ளன. இதில், 2வது கூட்டத்தை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் புறக்கணித்து விட்டார். வளைகாப்புக்கு தேதி கொடுத்து விட்டதால், பங்கேற்கவில்லை என்று காரணம் கூறுகிறார். அதோடு, பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவதையும் எதிர்ப்பதாக கூறியுள்ளார். உண்மையில் இங்கு யார் அடிமை ஆட்சி நடத்துகிறார்கள் என்பது தெரியவில்லை..?, எனக் கூறினார்.

Views: - 270

0

0