திமுக மீது எந்த வருத்தமும் இல்ல… கண்ணுன்னு இருந்தா கலங்கத்தானேச் செய்யும் : கேஎஸ் அழகிரியின் விளக்கம்.. நகைப்புக்குள்ளான கூட்டம்..!!!

6 March 2021, 1:26 pm
Nellai KS Alagiri Byte - updatenews360
Quick Share

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தின் போது கண்கலங்கியது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கேஎஸ் அழகிரி விளக்கம் அளித்துள்ளார்.

சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் திமுக – காங்கிரஸ் இடையிலான பேச்சுவார்தையில் இழுபறி நீடித்து வருகிறது. நடப்பதை பார்க்கும் போது திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கும் என்பது சந்தேகமாகத்தான் இருக்கிறது. காரணம், காங்கிரஸ் கேட்கும் தொகுதிகளின் எண்ணிக்கைக்கும், திமுக கொடுக்க நினைக்கும் தொகுதிகளின் எண்ணிக்கையின் அளவு, மலைக்கும் – மடுவுக்கும் இருக்கும் சந்தேகம் என்று காங்கிரஸ் மாநில தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்திருந்தார்.

அதோடு, திமுக தங்களை நடத்தும் விதம் சரியில்லை எனக் கூறி, நேற்று நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் அழகிரி கண்ணீர் விட்டுள்ளார்.

இந்த நிலையில், சென்னையில் இன்று கேஎஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அவர் பேசியதாவது :- இதுவரையில் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்த திமுகவிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. திமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல் முடிந்த பிறகு மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும், என்றார்.

மேலும், செயற்குழு கூட்டத்தில் கண்கலங்கியது பற்றிய கேள்விக்கு, “கண் என்று இருந்தால் கண்ணீர் வருவது இயல்புதான். கண் இல்லை என்றால் கண்ணீர் வராது. திமுக மீது எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. தொகுதி பங்கீட்டில் காலதாமதம் ஏதும் நடக்கவில்லை. நேர்காணல் முடிந்தபிறகு, திட்டமிட்டபடி பேச்சுவார்த்தை நடக்கும்,” என்றார்.

Views: - 28

0

0