வைகுண்டராஜன் குடும்பத்தில் சொத்துப் பிரச்சனை… அடியாட்களை வைத்து மணல் ஆலை மேலாளரை வாகனம் ஏற்றி கொல்ல முயற்சி!!

Author: Babu Lakshmanan
20 August 2022, 2:48 pm
Quick Share

கன்னியாகுமரி அருகே தாது மணல் ஆலையில் இயந்திரங்களை அத்துமீறி எடுக்க வந்தவர்களை தடுக்க முயன்ற மேலாளரை, வாகனத்தில் ஏற்றி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சு கிராமத்தை அடுத்த கனகப்புரம் பகுதியில் தாது மணல் ஆலை உள்ளது. இங்கு முத்துக்கிருஷ்ணன் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த தாது மணல் பிரித்தெடுக்கும் ஆலையை விவிமினரல் வைகுண்டராஜனும், அவரது தம்பி ஜெகதீசன் என்பவரும் நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் அந்த தாது மணலாலை ஜெகதீசனுக்கு ஒதுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே அந்த மணல் ஆலையில் உள்ள இயந்திரங்களை எடுப்பதற்காக வைகுண்ட ராஜனின் தூண்டுதலின் பெயரில் அடியாட்கள் உள்ளே புகுந்து இயந்திரங்களை எடுக்க முயன்றுள்ளனர். அப்போது, இதனை முத்துக்கிருஷ்ணன் தடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் அங்கிருந்த வாகனத்தை அவர் மீது ஏற்றி கொலை முயற்சி செய்ய முடிந்ததாக கூறப்படுகிறது.

இதில் படுகாயம் அடைந்த முத்து கிருஷ்ணன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அஞ்சு கிராமம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனிடையே காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முத்துகிருஷ்ணன், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இயக்கத்தை சார்ந்தவர் என்பதால் அவரது இயக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் மகாராஜன் மருத்துவமனைக்கு சென்று அவரை நலம் விசாரித்தார்.

இதைஅடுத்து அவர் கூறும்போது இரண்டு முதலாளிகளின் சொத்து பிரச்சனையில் தங்களது இயக்கத்தைச் சேர்ந்த அப்பாவி ஒருவரை வாகனம் ஏற்றி கொலை செய்ய முயன்றுள்ளனர். எனவே வைகுண்டராஜன் மீது குமரி மாவட்ட போலீசார் உடனடியாக வழக்கு பதிவு செய்தவுடன் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என அவர் தெரிவித்தார்.

மேலும் பண பலத்தைக் கொண்டு வழக்கிலிருந்து தப்ப முயற்சி செய்வதாகவும் குற்றம் சாட்டிய அவர், காவல் துறையினர் வைகுண்டராஜனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும், என கூறினார்.

Views: - 963

1

1