தமிழகத்திலும் காங்கிரஸ் தனித்துவிடப்படும் : பீகார் தேர்தல் முடிவுகளை ஒப்பிட்டு பாஜக நிர்வாகி குஷ்பு கருத்து..!

10 November 2020, 12:15 pm
Kushboo Laptop - Updatenews360
Quick Share

பீகார் : பீகார் சட்டப்பேரவை தேர்தலில் ஜேடியூ – பாஜக கூட்டணி முன்னிலை பெற்றுள்ள நிலையில், காங்கிரஸ் குறித்து தமிழக பாஜக நிர்வாகி குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார்.

பீகார் சட்டப்பேரவை தேர்தல் 3 கட்டங்களாக நடந்து முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில், பாஜக – ஜேடியூ கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்றுதுள்ளது. காங்கிரஸ் கூட்டணியை விட சுமார் 30 தொகுதிகள் முன்னிலையில் உள்ளது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் பாஜக – ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி 129 தொகுதிகளிலும், காங்கிரஸ் – ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி 99 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துவிடப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்று தமிழக பாஜக நிர்வாகி குஷ்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “2021ம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி மாறும் வாய்ப்பு உள்ளது. அதேவேளையில், காங்கிரஸ் தனித்து விடப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. அக்கட்சி பெரும் சுமையாகவே இருக்கிறது. மேலும், பீகார் சட்டப்பேரவை தேர்தலில் தேஜஸ்வி யாதவ் நன்றாக போராடியுள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்,” எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 21

0

0