5 ஆண்டு சட்டப்படிப்புக்கு ஆக.,5 முதல் விண்ணப்பிக்கலாம் : அம்பேத்கர் பல்கலை., அறிவிப்பு

1 August 2020, 2:08 pm
ambedkar law college - updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் 5 ஆண்டு சட்டப்படிப்புக்கு ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அம்பேத்கர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
தமிழ்நாட்டில்‌ ஐந்தாண்டு சட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை விண்ணப்பங்கள்‌ ஆக.,5ம் தேதி முதல் இணையதளம் www.tndalu.ac.in வாயிலாகவும், ஆக.,10ம் தேதி முதல்‌ நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.

“மூன்றாண்டு சட்டப்படிப்பு மற்றும்‌ முதுகலை சட்ட மேற்படிப்புகளுக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்கும் தேதி பல்கலைக்கழக இணையதளத்தில் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0