ஒய் பிளட் ; சேம் பிளட்: ஆபாச வார்த்தைகளால் காதை மூட வைத்த வக்கீல்: போலீசுக்கே இந்த நிலையா..!!

Author: Sudha
3 August 2024, 1:50 pm
Quick Share

திருப்பத்தூர் ஜோலார்பேட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தில்லைநகரை சேர்ந்த கமலக்கண்ணன் மற்றும் சாய்பாபா நகரை சேர்ந்த பைரோஸ்கான் ஆகியோரிடம் தனது காரை ஒரு லட்சம் ரூபாய்க்கு அடமானம் வைத்துள்ளார்.

அடமானம் வைக்கப்பட்ட அந்த காரை கமலக்கண்ணனும் பைரோஸ்கானும் சேர்ந்து போலியாக பத்திரம் தயாரித்து மூன்று லட்சம் ரூபாய்க்கு விற்று விட்டதாக சொல்லப்படுகிறது. காரைத் திரும்பக் கேட்ட பெண்ணிடம் காரை திரும்பத் தர முடியாது என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ என்று கமலக்கண்ணனும் பைரோஸ்கானும் கொலை மிரட்டல் விடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைய அந்த பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறை தீர்ப்பு கூட்டத்தின் போது மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று மயங்கி விழுந்ததாக தெரிகிறது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.கமலக்கண்ணன் மற்றும் பைரோஸ் கான் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

இவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ் அவர்கள் இருவரிடமும் நீதிபதி கேட்டால் உடல்நிலை சரியில்லை என்று கூறுங்கள் என்று சொல்லி தந்ததாக சொல்லப்படுகிறது. அதை கேட்ட காவலர் குடியரசன் எதற்காக இப்படி தவறாக வழி நடத்துகிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த வழக்கறிஞர் சுரேஷ் காவலர் குடியரசனை தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்த்துள்ளார் அத்தனை பேர் சுற்றி இருக்க ஒரு நல்ல பொறுப்பில் இருக்கும் ஒரு வக்கீல் ஒரு காவலரை தகாத வார்த்தைகளால் பேசியது நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதுமட்டுமல்லாமல் “இது எங்க கோர்ட் நாங்க பார்த்துப்போம்” என்று கூறினார் வழக்கறிஞர் சுரேஷ். கோர்ட் வளாகத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Instagram ஓட்டலில் அறை எடுத்து 20 நாட்களாக சிறுமியை சீரழித்த இளைஞர் : இன்ஸ்டாகிராம் நண்பனால் வந்த வினை!!
  • Views: - 119

    0

    0