விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்த விஜயதரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி கடந்த 6 மாதங்களுக்கு முன் பாஜகவில் ஐக்கியமானார்.
இந்த நிலையில் அவருக்கு பாஜக கட்சியில் இது வரை எந்தவித பொறுப்புகளும் பதவிகளும் வழங்கபடாமல் இருந்து வருவதை நேற்று முன்தினம் நிகழ்ச்சி ஒன்றின் போது தெரிவித்து இருந்தார்.
இது சம்பந்தமாக தமிழக பால் வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில் தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜா.கவில் இணைந்தது எவ்வளவு பெரிய தவறு என்று மிக குறுகிய காலத்தில் உணர்ந்துள்ளார்.
குமரி மாவட்ட அரசியல் என்பது மதச்சார்பற்ற மற்றும் சமூக ரீதியான அரசியலுக்கு உறுதுணையாக இருக்க கூடியது 1822 முதல் முறையாக இந்திய துணைக்கண்டத்தில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க போராட்டமான தோள் சீலை போராட்டம் உட்பட மொழிப்போர் போராட்டம் உள்ளிட்டவற்றை நடத்திய பெருமை மிகுந்த இந்த மாவட்டத்தில் இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்கும் தாவ கூடியவர்களுக்கு இடமே இல்லை என்பதை கடந்த காலங்கள் உருவாக்கி உள்ளன.
ஆட்டிற்கு குழையை காட்டினால் ஆடு பின்னால் செல்லும். அதே போன்று போனவர் தானே நன்றாக அனுபவிக்கட்டும் என்று கூறினார்
விஜய் கட்சி துவங்கியதை குறித்து விமர்சிக்க எதுவும் இல்லை. நாட்டில் எத்தனை ஆயிரம் கட்சிகளோ உள்ளன திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக மாறிய பிறகு எத்தனையோ கட்சிகள் உருவாகி மறைந்து போய் உள்ளன.
விஜய் அவரது கட்சியின் கொள்கை என்ன காரணத்தை மையப்படுத்தி அரசியல் செய்ய போகிறார் என்பது குறித்து எதுவும் பேசவில்லை அதனால் அதை பற்றி நாம் பேசுவது அர்த்தமில்லை
எம்.ஜி.ஆர் காலில் விழுந்த பிறகுதான் கலைஞர் ஆட்சியை பிடித்தார் என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறிய கருத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி தவழ்ந்து போய் முதல்வர் ஆனது போன்றா என்றும் சீனிவாசன் என்ன வரலாற்று ஆசிரியராக மாற முயற்சி எடுக்கிறாரோ இது தெர்மோ கோல் போன்ற ஒரு கதைதான் என்றும் எம்ஜிஆரும் கலைஞரும் சிறந்த நண்பர்கள் நட்போடு பழகியவர்கள் கலைஞரை தலைவராக ஏற்றுக் கொண்டு அவருக்காக பல்வேறு பொதுக்கூட்டங்களில் பேசியவர் தான் எம்ஜிஆர்.
தலைவர் கலைஞர் எப்படி பட்ட ஆளுமை எப்படி பட்ட வைராக்கியமான அரசியல்வாதி எந்த ஒரு சூழலிலும் சமரசங்களுக்கு இடம் கொடுக்காத ஒரு ஆளுமையை பார்த்து திண்டுக்கல் சீனிவாசன் போன்ற நபர்கள் பேசுவது அசிங்கம்
அதிமுகவுக்கு பாஜகவுக்கும் இடையே உறவில் விரிசல் ஏற்பட்ட பிறகு பலமுறை அவர்கள் விமர்சித்து பேசி இருக்கிறார்கள் அதில் ஒன்றும் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை
பாஜக அதிமுகவை கபளீகரம் செய்ய முயன்றார்கள் அதற்குள் அவர்கள் விழித்துகொண்டதால் தப்பி ஓடி நிற்கிறார்கள்
இவர்கள் மாறி மாறி விமர்சிப்பது என்பது புதிதல்ல வேண்டுமென்றால் நான் நூறு எடுத்துக்காட்டுகளை காட்டுகிறேன் இருவரும் உறவில் இருந்த போது விமர்சித்து பேசி உள்ளனர்.
அவர்கள் பேசியதால் தான் வெளியே சென்றார்கள். அதைவிட்டு பாஜகவின் கொள்கை பிடிக்கவில்லை என்றோ தமிழகத்திற்கு பொருளாதாரம் சரியாக வரவில்லை என்றோ போனார்களா அவர்கள் பேசியது பிடிக்கவில்லை சதி செய்ததை தெரிந்து கொண்டார்கள் அதனால் தான் சென்றார்கள்
திமுகவை யாரும் குறைத்து மதிப்பிடாதீர்கள் திமுக ஆலமரம் போன்றது யாருக்கும் அஞ்சாத பனங்காட்டு நரி. அதனால் யாராவது வந்து திமுக அழித்து விடுவோம் என்று சொன்ன உடன் அஞ்சுவோமா என்று கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.