செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே காரணை கிராமத்தில், பஞ்சமி நிலம் உள்ளது. இந்த பகுதியில் உள்ள பஞ்சமி நில மீட்பு போராட்டத்தில் இறந்தவர்களுக்கு ஆண்டுதோறும் நினைவஞ்சலி கூட்டம் நடக்கும்.
கடந்த 2012ம் ஆண்டு, பஞ்சமி நில மீட்பு போராட்டத்தில் இறந்தவர்களுக்கு நடந்த நினைவஞ்சலி கூட்டத்திற்கு, திருமாவளவன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தனியார் நிலம் வழியாக சென்றனர். அப்போது, தனியார் நிலத்தை விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் கட்சியினர் சேதப்படுத்தியாக குற்றச்சாட்டு எழுந்தது .
அதே பகுதியைச் சேர்ந்த தீபன் சக்கரவர்த்தி என்பவர், மாமல்லபுரம் காவல் நிலையத்தில், தன் நிலத்தை சேதப்படுத்தியதாக புகார் அளித்தார். இந்த புகாரையடுத்து, திருமாவளவன் உள்ளிட்ட, 14 பேர் மீது, வழக்குப் பதிவு செய்தனர்.
இவ்வழக்கு, செங்கல்பட்டு முதன்மை மாவட்ட அமர்வு குற்றவியல் நீதிமன்றத்தில், நேரில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை அக்டோபர் ஒன்றாம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
திருமாவளவன் நீதிமன்றத்தில் ஆஜராக வந்ததை தொடர்ந்து , ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்கு குவிக்கப்பட்டிருந்தனர்.
இதனை அடுத்து செய்தியாளரை சந்தித்த திருமாவளவன் தெரிவித்ததாவது : செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு, நினைவஞ்சலி செலுத்த சென்ற பொழுது காவல்துறையினர் பொய் வழக்கு புனைந்தார்கள். இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பாக இன்று நான் உட்பட 14 பேர் நேரில் ஆஜராகினோம் என தெரிவித்தனர்.
முதலமைச்சர் அமெரிக்க பயணத்தை மேற்கொண்டு உள்ளார். ஆயிரக்கணக்கான தொழில் முதலீட்டாளர்களை சந்திக்க உள்ளார் என தெரிகிறது. அவரது பயணம் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.
துணை முதலமைச்சர் பற்றி முதலமைச்சரிடம், கேள்வி எழுப்பிய போது அவர் எந்த பதிலும் சொல்லவில்லை, அது திமுகவின் உட்கட்சி விவகாரம் முதலமைச்சரின் தனிப்பட்ட அதிகாரம் அதில் யூகத்தின் அடிப்படையில் கருத்து கூற எதுவும் இல்லை என தெரிவித்தார்.
சினிமாவைப் பற்றி அவ்வளவாக எனக்கு தெரியாது. மலையாள சினிமாவில் நடிகர்களின் பாதுகாப்புக்காக அமைப்பு ஒன்று இயங்கி வருகிறது. அதில் தற்பொழுது பாலியல் சீண்டல் குறித்த புகார் எழுந்துள்ளது.
பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைப்பை சார்ந்தவர்கள் அனைவரும் பதவி விலகி இருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும் என்ற போர் குரல் நியாயமானது . பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன்.
தமிழ் சினிமா இது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்ததாக தெரியவில்லை , எனவே அது குறித்து கருத்து கூற விரும்பவில்லை என தெரிவித்தார்.
கல்விக் கொள்கையை பொறுத்தவரை தமிழ்நாடு முடிவு எடுப்பதற்கான அதிகாரம் இருக்கிறது. புதிய கல்விக் கொள்கை அமுல்படுத்தினால் தான் நிதி ஒதுக்கப்படும் என பிடிவாதமாக இருப்பது சரியல்ல இது குறித்து நான் நாடாளுமன்றத்தில் பேசி இருக்கிறேன்.
இந்த போக்கை தற்பொழுது கண்டிக்கிறோம். தேசியக் கொள்கை நடைமுறைப்படுத்துவது, தொடர்பாக மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மிரட்டல் அரசியலில் இந்திய ஒன்றிய அரசு ஈடுபடுவது வன்மையான கண்டனத்திற்குரியது. நிறுத்தி வைக்கப்பட்ட கல்வி மேம்பாட்டுக்கான நிதியை உடனே தர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.