சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று பதவியேற்று வருகின்றனர்.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 19-ந்தேதி நடைபெற்றது.
12 ஆயிரத்து 838 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு அமைதியான முறையில் தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் நடத்தி முடித்துள்ளது. மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் மொத்த இடங்களில் 4 வார்டுகளில் போட்டி இல்லாமல் தேர்வு செய்யப்பட்டனர்.
இதேபோல நகராட்சி வார்டுகளில் 3,843 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 18 வார்டுகளில் போட்டி இல்லாமல் தேர்வு செய்யப்பட்டனர். பேரூராட்சியில் மொத்தம் உள்ள 7,621 பதவிகளுக்கு 196 இடங்கள் போட்டியின்றி கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற மாநகராட்சி, நகராட்சி கவுன்சிலர்களுக்கு ஆணையர்களும், பேரூராட்சி கவுன்சிலர்களுக்கு செயல் அலுவலர்களும் பதவிப் பிரமாணம் செய்து வைத்து வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆணையர் ககன்தீப் சிங் பேடி பதவிப்பிரமாணம் செய்து வைத்த வருகிறார்.
கோவை மாநகராட்சியில் உள்ள நூறு வார்டுகள் 96 வார்டுகளில் திமுக கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன. மூன்று வார்டுகளில் அதிமுக.,வும் ஒரு வார்டில் எஸ்.டி.பி.ஐ கட்சியும் வெற்றி பெற்றன. இதனிடையே வெற்றி பெற்றவர்களுக்கான பதவியேற்பு விழா கோவை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா புதிய மாமன்ற உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். வார்டு 1ல் இருந்து வரிசையாக நூறு வார்டுகளுக்குமான உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து வருகிறார்.
பதவியேற்பு நிகழ்ச்சியை முன்னிட்டு மாநகராட்சி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரின் கீழ் இந்திய இராணுவம் பாகிஸ்தான்…
சினிமாவை பொறுத்தவரை நடிகைகள் காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழிக்கு ஏற்ற கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, பிரபலமாகிவிட்டு திருமணத்திற்கு பிறகு…
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நீடித்து கூருகிறது. எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஆந்திராவை சேர்ந்த ராணுவ…
சீரியல் நடிகைகள் மாறி மாறி தாலி கட்டிக் கொண்டு மாலை கழுத்துமாக இருக்கும் வீடியோவை இணையத்தில் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…
ஜோரா கை தட்டுங்க தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு சில திரைப்படங்களில் ஹீரோவாகவும்…
பகல்காம் பகுதியில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இந்தியா,…
This website uses cookies.