இன்று மாலை வெளியாகிறது உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு : 9 மாவட்டங்களில் தயார் நிலையில் தேர்தல் பணிகள்..!!!

Author: Babu Lakshmanan
13 September 2021, 11:33 am
Quick Share

வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறது.

தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்பட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. எனவே, எஞ்சிய மாவட்டங்களுக்கு செப்.,15ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தேர்தலுக்கான ஏற்பாடுகளை தமிழக தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே, உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தேர்தல் ஆணையம் அண்மையில் ஆலோசனை நடத்தியது. அப்போது, விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றும், அரசியல் கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறது. சென்னையில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்திக்கும் மாநில தேர்தல் ஆணையர் வெளியிட உள்ளார்.

Views: - 143

0

1