உள்ளே…வெளியே…ஆட்டம்! கதி கலங்கி நிற்கும் தமிழக காங்கிரஸ்.!!

Author: Udayachandran RadhaKrishnan
26 August 2021, 7:01 pm
DMK Congress -Updatenews360
Quick Share

9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்தப்படும் என்பது உறுதியாகிவிட்டது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய பின், திமுக சந்திக்கவிருக்கும் முதல் தேர்தல் இதுவாகும்.

இதையடுத்து வருகிற டிசம்பர் மாத இறுதிக்குள், நகராட்சித் தேர்தலை சந்திக்கவும் திமுக தயாராகி வருகிறது.

DMK to prepare for local body polls with allies - The Hindu

2019 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் மெகா கூட்டணி அமைத்ததுபோல் ஊரக உள்ளாட்சி மற்றும் நகராட்சி தேர்தலிலும் திமுக கூட்டணி அமைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபோன்ற நிலை ஏற்பட்டால் காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு குறைந்தபட்சம் 30 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டிய நெருக்கடி திமுகவுக்கு உருவாகலாம்.

Lok Sabha elections 2019: Congress signs seat-sharing agreement with DMK,  to contest 9 seats in Tamil Nadu | India News - Times of India

இந்த கூட்டணி அப்படியே நீடிக்கும் என்றால் திமுக 90 சதவீத இடங்களில் போட்டியிட விரும்பும் என்பது உறுதி. எஞ்சிய 10 சதவீத இடங்களை மட்டுமே கூட்டணி கட்சிகளுக்கு பகிர்ந்தளிக்கும்
வாய்ப்பு உள்ளது. அதே நேரம் திமுகவோ 100 சதவீத வெற்றியை உறுதி செய்ய விரும்புகிறது. உள்ளாட்சி அமைப்புகள் முற்றிலும் தங்கள் கைவசம் இருந்தால்தான் 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது முன்பை விட இன்னும் வலுவாக செயல்பட முடியும் என்று அது கருதுகிறது.

திமுகவின் இந்த எண்ணத்துக்கு காங்கிரஸ் தடைக் கல்லாக இருக்கலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சு உள்ளது. இதனால் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் நகராட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் காங்கிரசை கழற்றி விடும் முடிவுக்கு திமுக தலைமை வந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

Congress Inks Poll Pact With DMK In Tamil Nadu, To Contest On 25 Seats

நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை திமுகவை சார்ந்தே இருக்க வேண்டிய கட்டாயம் காங்கிரசுக்கு இருப்பதால் எதிர்வரும் ஊராட்சி மற்றும் நகராட்சி தேர்தல்களில் எங்களுக்கு இத்தனை சதவீத இடங்கள் கொடுங்கள் என்று திமுகவிற்கு அக்கட்சியால் அழுத்தம் தர முடியாது என்பது வெளிப்படையான விஷயம்.

இதனால் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரசுக்கு கல்தா கொடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறைவான இடங்களை திமுக ஒதுக்கினாலும் காங்கிரசுக்கு தர்மசங்கட சூழ்நிலை ஏற்படும். இப்படி இருதலைக்கொள்ளி எறும்பாக காங்கிரஸ் சிக்கித்தவிக்கிறது.

அதன் எதிரொலியாகத்தான் திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி அண்மையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது ஊரக உள்ளாட்சி தேர்தல் பற்றி கட்சித் தொண்டர்களை உசுப்பேற்றி விடும் விதமாக, சற்று கொந்தளிப்பாகவே பேசினார்.

KS azhagiri on pondy assembly elections ! புதுச்சேரியில் தனித்து நிற்கவும்  தயார்- Dinamani

இத்தனைக்கும் இந்த மாவட்டங்களில் 2019-ம் ஆண்டு இறுதியில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. அப்படி இருந்தும் கே. எஸ். அழகிரி திடீரென உள்ளாட்சி தேர்தல் பற்றி பேசியிருப்பது, திமுக கூட்டணியில் அக்கட்சிக்கு இடமில்லை என்பதையே சூசகமாக உணர்த்துகிறது.

இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சரி அப்படி அவர் என்னதான் பேசினார்?….

“நான் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்திருக்கிறேன். ஒன்றிய பெருந்தலைவராக இருந்திருக்கிறேன். சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கிறேன். நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து இருக்கிறேன். இப்போது மாநில காங்கிரஸ் தலைவராக இருக்கிறேன். இதில் எது மிக கஷ்டம் என்றால் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்வு செய்யப்படுவதுதான்.

எம்பி தேர்தலை பொறுத்தவரை ஒரு சட்டப் பேரவை தொகுதியில் ஓட்டு குறைந்தால் இன்னொரு தொகுதியிலிருந்து கிடைத்துவிடும். எம்எல்ஏ தேர்தலில் ஒரு பகுதியில் குறைந்தால் இன்னொரு பகுதியில் இருந்து வந்து விடும். ஒன்றிய தேர்தலில் ஒரு ஊரில் குறைந்த அளவு இருந்தால் இன்னொரு ஊரில் சரிக்கட்டி விடலாம். ஆனால் ஊராட்சி மன்றத் தேர்தல் அப்படி அல்ல. ஊரில் உள்ள ஒவ்வொரு வீட்டிலிருந்தும் வாக்குகள் பெற்றால்தான் ஜெயிக்க முடியும்.

அப்படிப்பட்ட நிலையில் அனைவருமே ஊராட்சி தேர்தலை குறிவைத்து செயல்படுங்கள். கிராமங்களை குறிவைத்து கொண்டிருங்கள். உள்ளாட்சி தேர்தலில் நாம் ஜெயிக்கிறோமோ, தோற்கிறோமோ என்பது முக்கியமல்ல. எல்லா கிராமங்களிலும் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு தெருவிலும் காங்கிரஸ் கொடி ஏற்றப்பட்டு இருக்கவேண்டும். காங்கிரசார் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டு வாசலிலும் 15 அடி உயரத்திற்கு காங்கிரஸ் கொடியை ஏற்றவேண்டும். நமது கொடி பறக்கவேண்டும்” என்று கூறிஇருக்கிறார்.

இன்னொரு பக்கம், திமுகவின் 100 நாள் ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்று அழகிரி பாராட்டும் தெரிவித்திருக்கிறார்.

No difference of opinion between DMK, Congress: KS Alagiri- The New Indian  Express

இதுபற்றி அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “திடீரென்று தமிழகத்தில் காங்கிரசை தலைநிமிரச் செய்யும் வகையில் தொண்டர்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்று அழகிரி பேசியிருப்பது, நெல்லை தென்காசி, காஞ்சிபுரம் செங்கல்பட்டு, விழுப்புரம் கள்ளக்குறிச்சி, வேலூர் ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் நடைபெற இருக்கும் ஊரக உள்ளாட்சி மற்றும் நகராட்சி தேர்தல்களில் அக்கட்சி தனித்துப் போட்டியிட விரும்புகிறது என்பதையே காட்டுகிறது. கூட்டணியிலிருந்து, திமுக வெளியேற்றுவதற்குள் நாமாகவே முந்திக் கொண்டு வெளியேறி விட்டால் அது காங்கிரசுக்கு கவுரவமாக இருக்கும் என்பதை உணர்ந்து அவர் இவ்வாறு பேசி இருக்க வாய்ப்புள்ளது.

It's Congress vs BJP in five constituencies in Tamil Nadu | The News Minute

அதேநேரம் உள்ளாட்சித் தேர்தல்கள் நடக்க இருக்கும் இந்த 9 மாவட்டங்களில், நெல்லை, தென்காசி தவிர காங்கிரசுக்கு மற்ற 7 மாவட்டங்களிலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு செல்வாக்கு கிடையாது. அதனால் திமுக கூட்டணியில் தொடர்ந்து நீடித்ததாலும் கூட எதிர்பார்க்கும் இடங்கள் காங்கிரசுக்கு கிடைக்காது. அதேபோல் நகராட்சி தேர்தலிலும், அதிக இடங்களை திமுக ஒதுக்குவதும் சந்தேகம்தான். மேலும் உள்ளாட்சி, நகராட்சி தேர்தல்களில் கூட்டணியை முடிவு செய்யும் அதிகாரம் திமுக மாவட்ட செயலாளர்களிடம் வழங்கப்பட்டிருப்பதால் அவர்கள் போட்டியிட நினைக்கும் இடங்களை காங்கிரசுக்கு வாரி வழங்கி விடமாட்டார்கள் என்பதையும் அழகிரி உணர்ந்தே இருக்கிறார்.

Former IPS officer K. Annamalai appointed Tamil Nadu BJP president - The  Week

தங்கள் கட்சிக்காரர்கள் வீட்டுக்கு முன்பு காங்கிரஸ் கொடியை ஏற்றவேண்டும் என்று அழகிரி கூறுகிறார். இது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் திட்டத்தை அப்படியே காப்பி அடிப்பதுபோல தோன்றுகிறது. ஏனென்றால் ஆகஸ்ட் 15-ம் தேதி தமிழக கிராமங்கள் தோறும் பாஜக கொடியை ஏற்றுவோம். தமிழகத்தின் 12 ஆயிரம் கிராமங்களிலும் பாஜக கொடி பறக்கும் என்று அண்ணாமலை கூறியிருந்தார். அதன்பிறகே இப்போது அதை காங்கிரஸ் அறிவிக்கிறது.
தமிழகத்தில் பாஜகவை விட தாங்கள் வலுவான கட்சி என்பதை காட்டுவதற்காக கே.எஸ். அழகிரி காங்கிரஸ் கொடி மீது இப்படி திடீர் அக்கறை காட்டி இருக்கிறார் என்பதையும் உணர முடிகிறது.

அதனால்தான் உள்ளாட்சி தேர்தலில் நாம் ஜெயிக்கிறோமோ தோற்கிறோமோ என்பது முக்கியமல்ல. எல்லா கிராமங்களிலும் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என்று அவர் பேசியிருப்பது” என அவர்கள் குறிப்பிட்டனர்.

சொந்தக் காலில் நின்றால், அதன் பலன் பூஜ்ஜியம்தான் என்பது தெரிந்தும் ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என்று கே.எஸ். அழகிரி பேசியிருப்பது
தமிழக அரசியலில் துணிச்சலான விஷயமாகவே பார்க்கப்படுகிறது!

Views: - 217

0

0