விரைவில் உள்ளாட்சி தேர்தல்… ஆனா ஒரு கண்டிசன்… அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிறகு தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Author: Babu Lakshmanan
6 September 2021, 7:21 pm
state election commission-Updatenews360
Quick Share

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளுடன் தமிழக தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்தியது.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்கள் புதிதாக பிரிக்கப்பட்டது. இதனால், கடந்த முறையில் நடந்த தேர்தலின் போது இந்த மாவட்டங்களுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்படவில்லை.

விடுபட்டு போன 9 மாவட்டங்களுக்கு செப்.,15ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, தேர்தலுக்கான பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வெளியீடு மற்றும் வாக்குப்பதிவுக்கான நேரம் நீட்டிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

இனி தேர்தல் தேதியை அறிவிப்பது மட்டுமே பாக்கி என்ற நிலையில், உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க மேலும் 6 மாதம் அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. ஏற்கனவே, 2 முறை அவகாசம் கோரியிருந்த நிலையில், தற்போது 3வது முறையாக அவகாசம் கேட்டுள்ளது தேர்தல் ஆணையம்.

இதனிடையே, 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது.
இந்தக் கூட்டத்தில் அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தங்களின் கருத்துக்களையும், கோரிக்கையையும் முன்வைத்தனர்.

இதன்பிறகு, தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் கருத்துக்கள் பரிசீலிக்கப்படும். விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். உள்ளாட்சி தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 295

0

0