உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணியில் 33 ஆயிரம் காவலர்கள் … பதற்றமான வாக்குச்சாவடிகளில் ஹை-செக்யூரிட்டி : தேர்தல் ஆணையம் அதிரடி

Author: Babu Lakshmanan
29 September 2021, 8:24 pm
Local Body Election -Updatenews360
Quick Share

சென்னை : உள்ளாட்சி தேர்தலில் பதற்றமான மற்றும்‌ பிரச்சனைக்குரிய வாக்குச்சாவடிகளில்‌ பாதுகாப்பை அதிகப்படுத்த மாநில தேர்தல்‌ ஆணையம்‌ உத்தரவிட்டுள்ளது.

சென்னை, தமிழ்நாடு மாநில தேர்தல்‌ ஆணைய கூட்டரங்கில்‌ தமிழ்நாடு மாநில தேர்தல்‌ ஆணையர்‌ முனைவர்‌ வெ. பழனிகுமார் தலைமையில்‌ காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு வேலூர்‌, ராணிபேட்டை, திருப்பத்தூர்‌, விழுப்புரம்‌, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும்‌ தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில்‌ ஊரக உள்ளாட்சி சாதாரணத்‌ தேர்தலை சிறப்பாக நடத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள்‌ குறித்து ஆய்வுக்கூட்டம்‌ இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில்‌ மாநில தேர்தல்‌ ஆணைய செயலாளர்‌ திருமதி எ. சுந்தரவல்லி, காவல்‌ துணைத்‌ தலைவர்‌ (நிர்வாகம்‌) திரு எஸ்‌. பிரபாகரன்‌, காவல்‌ உதவி தலைவர்‌ முனைவர்‌ எம்‌. துரை கொள்ளை நோய்‌ தரப்பு இணை இயக்குநர்‌ மருத்துவர்‌ ப. சம்பத்‌, முதன்மை தேர்தல்‌ அலுவலர்‌ (ஊராட்சிகள்‌)க. அருண்மணி, முதன்மை தேர்தல்‌ அலுவலர்‌ (நகராட்சிகள்‌) திருமதி க. தனலட்சுமி, உதவி ஆணையர்‌ (தேர்தல்‌) சம்பத்குமார்‌ மற்றும்‌ ஆணையத்தின்‌ அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

பதற்றமான மற்றும்‌ பிரச்சனைக்குரிய வாக்குச்சாவடிகளில்‌ பாதுகாப்பை அதிகப்படுத்துதல்‌, கூடுதல்‌ காவலர்களை நியமித்தல்‌, சோதனைச்‌ சாவடிகள்‌ அமைத்தல்‌, வாக்கு எண்ணிக்கை மையங்களில்‌ முன்றடுக்குப்‌ பாதுகாப்பை ஏற்படுத்துதல்‌, மொபைல்‌ டீம்‌ அமைத்தல்‌ ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

இத்தேர்தலில்‌ 06.10.2021 அன்று நடைபெறும்‌ முதலாம்‌ கட்ட வாக்குப்பதிவின்போது 17,130 காவல்‌ துறைமினர்‌, 3,405 ஊர்க்‌ காவல்‌ படையினரும்‌, 09.10.2021 அன்று நடைபெறும்‌ இரண்டாம்‌ கட்ட வாக்குப்பதிவின்போது 16,006 காவல்‌ துறையினர்‌, 2,867 ஊர்க்‌ காவல்‌ படையினர்‌ என மொத்தம்‌ 39,408 காவல்துறையினர்‌ மற்றும்‌ ஊர்க்‌ காவல்‌ படையினர்‌ பாதுகாப்பு பணியில்‌ ஈடுபடுத்தப்பட உள்ளனர்‌.

மேலும்‌, முதல்‌ கட்ட தேர்தல்‌ நடைபெறும்‌ பகுதிகளில்‌ 04.10.2021 மாலை 05.00 மணிக்குப்‌ பின்னரும்‌, இரண்டாம்‌ கட்ட தேர்தல்‌ நடைபெறும்‌ பகுதிகளில்‌ 07.10.2021 மாலை 05.00 மணிக்குப்‌ பின்னரும்‌ சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பில்‌
வாக்காளர்கள்‌ அல்லாத வெளியிலிருந்து அழைத்து வரப்படும்‌ அரசியல்‌ கட்சி பிரமுகர்கள்‌ / கட்சித்‌ தொண்டர்கள்‌ அனைவரும்‌ அந்த உள்ளாட்சி பகுதியில்‌ இருந்து வெளியேறிவிட வேண்டுமென்றும்,‌ அவ்வாறு வெளியேறாதவர்கள்‌ மீது தேர்தல்‌ நடத்தை விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கவும்‌ தெரிலிக்கப்பட்டுள்ளது.

Views: - 221

0

0