சூடுபிடிக்கும் உள்ளாட்சி தேர்தல் : கூட்டணியை நம்பி பலனில்லை… பாமக, தேமுதிகவைத் தொடர்ந்து அதிரடி காட்டிய கமல்..!!

Author: Babu Lakshmanan
16 September 2021, 11:11 am
Kamal- Updatenews360
Quick Share

9 மாவட்டங்களில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி உள்பட 9 மாவட்டங்களுக்கு வரும் அக்.,6 மற்றும் 9ம் தேதிகள் என இருகட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்துள்ளார்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு அக்.,6ம் தேதியும், தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு அக்.,9ம் தேதியும் தேர்தல் நடக்கிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முதல் தொடங்கியுள்ளது.

இதனிடையே, உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனுக்களை அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் பெற்று வருகின்றன. அதேபோல, பாமக, தேமுதிகவும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்து, விருப்ப மனுக்களை வாங்கி வருகிறது.

இந்த நிலையில், 9 மாவட்டங்களில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலையொட்டி 9 மாவட்டங்களிலும் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே, கூட்டணிகளை விட்டு விலகி பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில், கமலின் இந்த முடிவும், உள்ளாட்சி தேர்தலில் பலமுனை போட்டியை உருவாக்கியுள்ளது.

Views: - 164

0

0