ஊரக உள்ளாட்சி தேர்தல்… 9 மாவட்டங்களுக்கும் தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் : தேர்தல் ஆணையம் உத்தரவு

Author: Babu Lakshmanan
18 September 2021, 5:55 pm
Quick Share

சென்னை : ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி 11 தேர்தல் பார்வையாளர்களை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி உள்பட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. எனவே, எஞ்சிய 9 மாவட்டங்களுக்கு செப்.,15ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 9 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் அக்.,6 மற்றும் 9ம் தேதிகள் என இருகட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்தார்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு அக்.,6ம் தேதியும், தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு அக்.,9ம் தேதியும் தேர்தல் நடக்கிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. மேலும், வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 15ம் தேதி முதல் தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய செப்டம்பர் 22ம் தேதி கடைசி நாளாகும். செப்.,23ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடக்கிறது. செப்.,25ம் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம். பதிவாகும் வாக்குகள் அக்.,12ம் தேதி எண்ணப்படுகிறது.

ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி 11 தேர்தல் பார்வையாளர்களை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பார்வையாளர்களின் விபரம் இதோ,

Views: - 137

0

0