டிச., இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் அமைச்சர் கே.என்.நேரு

17 July 2021, 2:07 pm
KN Nehru - Updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சியின் போது நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களை பிரித்து தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. இதனால், இந்த 9 மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளாட்சி தேர்தல் நடப்படாமல் இருந்து வந்தது. இந்த சூழலில் வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் விடுபட்ட மாவட்டங்களில் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில், செப்.,15ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் , சென்னையில் செய்தியாளர்களிடம் உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது :- தமிழகத்தில் டிசம்பர் இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். செப்டம்பர் 15க்குள் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். உள்ளாட்சி அமைப்புகளில் சீர்திருத்தம் மகளிர் இட ஒதுக்கீடு போன்றவற்றில் குற்றச்சாட்டு உள்ளது. குற்றச்சாட்டுகளை கலைந்து இந்த ஆண்டு இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். வாக்காளர் பட்டியல் சரிசெய்யப்படும் பணி விரைவுபடுத்தப்படும், என்றார்.

Views: - 108

0

0

Leave a Reply