கொரோனாவை தடுக்க நடவடிக்கை..! பொதுமுடக்கம் மேலும் 16 நாட்களுக்கு நீட்டித்த முதலமைச்சர்

29 July 2020, 4:42 pm
Corona_Lockdown_Updatenews360
Quick Share

பாட்னா: பீகார் மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மேலும் 16 நாட்களுக்கு பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் 200 நாடுகளை கடந்து கொரோனா இன்னமும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 1 கோடிக்கும் அதிகமானவர்களை கொரோனா தாக்கி உள்ளது. 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து உள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்க உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பல நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்தியாவில் தொற்று பரவலை கட்டுப்படுத்த 6ம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. மேற்கு வங்கம் உள்பட பல மாநிலங்களில் அடுத்த கட்ட ஊரடங்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு விட்டன.

அந்த அடுத்த மாதம் 31ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மேற்கு வங்கம் அறிவித்துவிட்டது. இந்நிலையில், பீகார் மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மேலும் 16 நாட்களுக்கு பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுகிறது.

அதற்கான அறிவிப்பை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 1ம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும்  என்றும் அம்மாநில அரசு கூறி உள்ளது.

Leave a Reply