ஒரு அறிவிப்பு…! 29 லட்சம் மக்களை காப்பாற்றிய மத்திய அரசு….!

23 May 2020, 9:33 am
Lockdown_UpdateNews360
Quick Share

டெல்லி: சரியான நேரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் 29 லட்சம் மக்களுக்கு கொரோனா பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, மார்ச் 24ம் தேதி நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 3 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு தற்போது மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இன்றோடு 60 நாட்கள் ஆனாலும், கொரோனா பரவல் கட்டுக்குள் வரவில்லை.  இந் நிலையில்,  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் 14 லட்சம் முதல் 29 லட்சம் பேர் வரை கொரோனா பாதிப்பு ஏற்படாமல் காக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நிதி ஆயோக் உறுப்பினர், கொரோனா சூழலை எதிர்கொள்வதற்காக மத்திய அரசு அமைத்த உயர்நிலைக் குழு தலைவர் விகே பால், புள்ளியியல் திட்ட அமலாக்கத்துறை செயலர் பிரவீன் ஸ்ரீவத்ஸ்வா ஆகியோர் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது விகே கோபால் கூறியதாவது: ஊரடங்கு இல்லை என்றால் கொரோனா பாதிப்பு, பலி எண்ணிக்கை அதிகரித்து இருக்கும். இப்போது  சிகிச்சை பெற்று வருவோரில் 80 சதவிகிதம் பேர் 5 மாநிலங்களில்தான் உள்ளனர்.

கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சரியான நேரத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், 29 லட்சம் பேர் வரை கொரோனா பாதிப்பு ஏற்படாமல் காக்கப்பட்டுள்ளனர் என்றார்.

Leave a Reply